மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பல்வேறு தகவல்களை கூறினார்.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு, அனைத்து வங்கிகளையும் நாடலாம் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, பொதுமக்கள் வங்கிகள் அதிகாலை முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடக்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ், அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவோர் கையில் மை வைக்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டும் பெற முடியும், ஏடிஎம்களில் ஒருமுறை ரூ.2,500 மட்டும் எடுக்க முடியும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தார்.

இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் இன்று டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

அரசு அலுவலகங்களில் பண பரிவர்த்தனைக்கு, மின்னணு மூலம் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணத் தட்டுப்பாட்டை போக்கவும், புதிய ரூபாய் நோட்டுகளை, பொதுமக்களிடம் வினியோகம் செய்யவும் நாடு முழுவதும் 82,000 ஏடிஎம் மையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.