பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

இதை அடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக டெல்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 என்கிற எண்ணிக்கையில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 578 பேரில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தற்போது டெல்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவாவில் முதல்முறையாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளான டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு இந்த ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று முதன்முதலாக மணிப்பூரில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.