Asianet News TamilAsianet News Tamil

வங்கி வேலை எதுவும் இருந்தா சீக்கிரம் முடிங்க மக்களே..! மார்ச் 27 முதல் 7 நாட்கள் லீவ் வருது

வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.
 

7 days leaves for banks in the period of 9 days from march 27 to april 4
Author
Chennai, First Published Mar 24, 2021, 8:06 PM IST

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் அண்மையில் 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் செயல்படாததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், வரும் 27ம் தேதியிலிருந்து ஏப்ரல் 4ம் தேதி வரையிலான 9 நாட்களில் எதார்த்தமாகவே 7 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளது.

7 days leaves for banks in the period of 9 days from march 27 to april 4

மார்ச் 27 –  நான்காவது சனிக்கிழமை விடுமுறை

மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை

மார்ச் 31 – நிதி ஆண்டின் கடைசி நாள் விடுமுறை

ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை

ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை

ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை விடுமுறை

மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 வரையிலான 9 நாட்களில் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய  2 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். எனவே வங்கிகளில் வேலை எதுவும் இருந்தால் வாடிக்கையாளர்கள் விரைவில் முடித்துக்கொள்வது நல்லது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios