viral video: ஹைதராபாத் கல்லறையில் பதுங்கியிருக்கும் 6 அடி மலைப்பாம்பு: மனதை பதறவவைக்கும் வைரல் வீடியோ
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பலுக்னுமா கல்லறையில் 6 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பலுக்னுமா கல்லறையில் 6 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் குவாதிரி சமான் பலுக்னுமா கல்லறை உள்ளது. மிகவும் பழமையான கல்லறையான இங்கு ஏராளமான மரங்களும், செடிகளும், புதர்களாகுமாக காட்சி அளிக்கிறது.
மகாராஷ்டிராவில் சொகுசு பஸ் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 11 பேர் கருகி பலி:20 பேர் காயம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் ஒருவர் கல்லறை அருகே ஏதோ செல்கிறது என்று பார்த்தபோது அங்கு 6அடி ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கவனித்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் தனது மொபைல் போனில் மலைப்பாம்பு மெதுவாகச் செல்வதை வீடியோ எடுத்துள்ளார். அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்ந்து சென்று, கல்லறைக்கு இடுக்கில் இருக்கும் கற்களுக்குள் சென்று பதுங்கிக்கொண்டது.
மிகப்பெரிய மலைப்பாம்பை பிடிக்க தனிநபராலும் சிலராலும் முடியாததால் அந்த பாம்பை அப்படியேவிட்டுவிட்டனர். இதையடுத்து மசூதி நிர்வாகத்திடம் இந்த வீடியோ குறித்து தெரிவிக்கவே அவர்கள் வனத்துறையின் உதவியை நாடியுள்ளனர்.
மாணவர்களுக்கான என்டிஎஸ்இ உதவித் தொகைத் திட்டம் நிறுத்திவைப்பு: என்சிஇஆர்டி அறிவிப்பு
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இந்தக் கல்லறையில் உள்ள மா மரம், புளிய மரத்தில்தான் சிறுவர்கள் விளையாடுவார்கள், காய்கள் பிடுங்கி சாப்பிடுவார்கள். இதுபோன்ற மிகப்பெரிய மலைப்பாம்பு இருப்பது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று கல்லறைக்கு அடியில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது