6000 crores collected from black money holders
மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடைக்குபின், வங்கிகளில் கணக்கில் வராத பணத்தை வங்கியில்டெபாசிட் செய்த நபர்களிடம் இருந்து, இதுவரை ரூ. 6 ஆயிரம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கும் என்று கருப்பு பணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின்(எஸ்.ஐ.டி.) துணைத் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான அரிசித் பசாயத்தெரிவித்துள்ளார்.
விசாரணை
நாட்டில் கருப்புபணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகளில் கணக்கில் வராத பணத்தை டெபாசிட் செய்யும் நபர்களைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று பெற்று வருகிறது.
கருணைதிட்டம்
அவ்வாறு கருப்புபணம் வைத்து இருப்பவர்கள் தாமாக முன்வந்து பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தில் கணக்கு ஒப்படைத்தால், 75 வரி, அபாரதத்துடன் 75 சதவீதம் செலுத்தி தப்பிக்கும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில், கருப்புபணம் ஒழிப்பு குறித்து சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குநரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளிட்ட அமைப்புகளின் நடவடிக்கையை சிறப்பு விசாரணைக்குழு மேற்பார்வையிட்டு வருகிறது.
ரூ. 6 ஆயிரம் கோடி
அந்த குழுவின் துணைத்தலைவர் அர்சித் பசாயாத் நிருபர்களிடம் கூறுகையில், “ வங்கியில் கணக்கில் வராத பணத்தை டெபாசிட் செய்த நபர்களிடம் இருந்து இதுவரை வருமானவரி அதிகாரிகள் ரூ. 6 ஆயிரம் கோடி வரி வசூலித்துள்ளனர். இந்த வசூல் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும். ஆனால், எவ்வளவு அதிகரிக்கும் என்பது இப்போது கூற முடியாது.
இமெயில்-எஸ்.எம்.எஸ்.
முதல்கட்டமாக வங்கிகளில் ரூ. 50 லட்சம் அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் மின் அஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒடிசா
ஒடிசா மாநிலத்தில் ஏறக்குறைய 1,092 பேர் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட்செய்துள்ளனர். வர்த்தகம் செய்பவர்கள் அதிகமான பணம் டெபாசிட் செய்து இருந்தால், அவர்களிடம் கடந்த 3 ஆண்டுகால வரவு, செலவு அறிக்கை, வருமானவரி செலுத்திய விவரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு கணக்கில் வராத பணத்தை டெபாசிட் செய்து இருந்தால், அவர்கள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். போதுமான விளக்கம் இல்லாவிட்டால், ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனத்துறை அதிகாரி
ஒடிசா மாநிலத்தில் ஒரு வனத்துறை அதிகாரி ரூ.2.5 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். அவரிடம் விளக்கம் கேட்டபோது அவரால் கூற இயலவில்லை. அதன்பின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்
