பிற்பகல் 2.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் காபூலில் இருந்து வடகிழக்கே 241 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. 

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிர்வுகளை உணரப்பட்டன.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் காபூலில் இருந்து வடகிழக்கே 241 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பின் இரண்டாவது முறையாக ரிக்டர் அளவில் 6 புள்ளிகளைக் கடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியிலும் பல கட்டிடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில அதிர்வில் சேதம் அல்லது உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்! இஸ்ரோவின் அடுத்த சாதனை!

Scroll to load tweet…

பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் உள்ளது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் பகுதியில் 213 கிமீ ஆழத்தில் மதியம் 2:20 மணிக்கு ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடல் சேது: இந்தியாவின் நீண்ட கடல் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!