கடந்த 5 ஆண்டுகளில் 586 ரெயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 53 சதவீத ரெயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது தெரிய வந்தள்ளது.

கடந்த 2014 முதல் தற்போது வரை 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய விபத்துகள் ஆகும்.

மோசமான ரயில் விபத்தாக, கடந்த 2016 நவம்பர் 20ல் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ெரயில் தடம்புரண்டதால் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 150 பேர் பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிக அளவு கூட்ட நெரிசல், ெரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் தடம்புரண்டது தெரியவந்தது.

கடந்த 2015 செப்டம்பர் 12ல் மீட்ட ர்கேஜ் ரயில்பாதையில் சென்ற ஷிவாலிக் குயின் ரயில் தடம்புரண்டது. இதில் பயணம் செய்த 36 சுற்றுலா பயணிகளில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.

செப்டம்பர் 12ல், கர்நாடகாவின் குல்பர்கி நகரில் செகந்திரபாத் - மும்பை இடையிலான லோக்மான்ய திலக் துரந்தோ ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 4ல் இரண்டு ரயில் தடம்புரண்டது. வாரணாசி சென்ற கமயானி எக்ஸ்பிரஸ் ரயில் காட்டாற்று வெள்ளம் காரணமாக தடம்புரண்டது. பின்னர் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இதில் 31 பேர் பலியானார்கள். 100 பேர் காயமடைந்தனர்.

மே 25ல் உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் ரூர்கேலா ஜம்மு தாவி ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டது 5 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர்.

அதேவருடம் மார்ச் 20ல் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரேபரேலியில் தடம்புரண்டதில் 58 பயணிகள் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர்.

பிப்ரவரி 13ல் பெங்களூரு - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு அருகே தடம்புரண்டதில் 10 பேர் பலியாக, 150 பேர் காயமடைந்தனர்.