அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிச் சிறுமியை 4 மாணவர்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த மாணவர்களை நிர்வணமாக்கி ஊர்வலமாக அழைத்துக் கென்றனர்.

அருணாசலபிரதேசத்தில் உள்ள யிங்கி ஓங் கிராமத்தில்  உள்ள 17 வயது பெண் அப்பகுதியில் உள்ள பள்ளியில்  பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஓரங் சங்மா என்ற மாணவர் இந்த மாணவியுடன் ஃபேஸ் புக் தொடர்பில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் அந்த  மாணவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பள்ளிச் சிறுமி  அவரை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓரங் சங்மா தமது 3 நண்பர்களுடன் இணைந்து அந்த மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்ககாரம் செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் அந்த மாணவர்களை சூழ்ந்து கொண்டு சிறை பிடித்தனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து அந்த கிராம மக்கள்  பிடிபட்ட மாணவர்களின்  ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் மாணவர்கள் இருவரையும்  கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரத்தில்  தப்பியோடிய 2  மாணவர்களையும்  போலீசார் தேடி வருகின்றனர்.