நேற்று நள்ளிரவு மத்திய பிரதேசம், குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பன்னிரெண்டு மிராஜ் (Mirage) 2000 ரக போர் விமானங்கள் மூன்று அணிகளாகக் கிளம்பியிருக்கின்றன.

மிராஜ் 2000 ரக விமானங்களில், துரிதமாக இலக்கைக் குறிவைக்கும் இஸ்ரேலிய litening targetting pods இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், லேசர் வழிகாட்டுதலில் இயங்கும் 1000 கிலோ குண்டுகளை மிராஜ் 2000 விமானங்கள் தாங்கிச் சென்றன.

இந்திய விமானப்படையின் எச்சரிகை விமானங்கள் பஞ்சாபிலிருந்தும், ஆளில்லா விமானமான ஹெரான் (Heron) கண்காணிப்பு விமானம் ஆக்ராவிலுள்ள விமானப்படை தளத்திலிருந்தும் சென்றிருக்கின்றன. எதிர்தாக்குதலை சமாளிக்க, சுகோய் (Sukhoi) ஜெட்களும் மிராஜ் 2000 ஜெட்களுக்குப் பின்னால் சென்றிருக்கின்றன.

காலை 3.40 மணிக்கு இந்திய விமானப் படை கண்ட்ரோல் அறையுடனான தனது தொடர்பைத் துண்டித்துக்கொண்டு தாக்குதலை 3.45 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. பலகோட் பகுதியில் வெற்றிகரமாகத் தாக்குதலை முடித்துக்கொண்டு, முசாஃபராபாத் பகுதியில் தாக்குதலைத் தொடங்கும்போது பாகிஸ்தான் விமானங்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இந்த விமானங்கள் அம்பாலா என்ற விமான ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டுள்ளன. பலாகோட்டில் 3.45 முதல் 3.53க்குள்ளும், முஸாஃபராபாத்தில் 3.48 முதல் 3.55க்குள்ளும், சாக்கோதியில் 3.58 முதல் 4.04க்குள்ளும் தாக்குதல்கள் நடந்துள்ளன.  

பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலை திசைதிருப்ப, மிராஜ் 2000 ரக விமானங்கள் Flareகளை வீசிச் சமாளித்துக்கொண்டிருந்தபோது, சுகோய் ஜெட்கள் அணிவகுத்து உதவிக்கு வந்ததும் பாகிஸ்தான் விமானங்கள் பின்வாங்கிவிட்டன. அதனால்தான் முசாஃபராபாத் தாக்குதலுக்கும், சாகோடி தாக்குதலுக்கும் இடையே பத்து நிமிட இடைவேளை ஏற்பட்டிருக்கிறது.

சாகோடி பகுதியில் வெற்றிகரமான தாக்குதலை முடித்துக்கொண்டு இந்திய விமானப் படையினர் திரும்பிய பிறகு, எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் காலை ஆறு மணியளவில், குஜராத் அருகே உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று (உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது)  இந்திய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.


 
இந்திய விமானம்  பாகிஸ்தானின் ரேடாரில் சிக்காமல், வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு, எவ்வித சேதாரமுமின்றி வெளியேறியது. தங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாகிஸ்தான் பின்வாங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 வருடங்களுக்கு பிறகு இந்தியா அதிபயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளது என்பதும், கடைசியாக 1971ம் ஆண்டு வங்காளதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்குள் சென்று அட்டாக் செய்ததும்  குறிப்பிடத்தக்கது. 

இதில் ஹைலைட் என்னன்னா?, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 190 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது பாலகோட்,. இந்த பகுதியில்தான் தொடர்ச்சியாக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI. இந்த தகவலை இந்திய உளவு அமைப்புகள் திரட்டி இலக்கை நிர்ணயித்ததும், இந்திய விமானப்படை துல்லிய தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.