அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இராணுவத்தில் இளைஞர்களை தற்காலிகமாக பணியில் சேர்க்கும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக 3 வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

மேலும் ரயில்களுக்கு தீவைத்தும் , ரயில் தண்டவாளங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் கற்களை வைத்து மறித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பயணிகள் ரயில்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2 நாட்களாக வடமாநிலங்களில் மட்டும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் , இன்று தென் மாநிலமான தெலுங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் பயணிகள் ரயிலை தீவைத்து எரித்ததுடன், ரயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் பலியா ரயில் நிலையத்தில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி இரண்டு இரயில்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ஒரு ரயில் பெட்டியை தீவைத்து எரிந்தனர். அதே போல், தெலுங்கான செகந்திராபாத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்களில், ரயில் நிலையங்கள் மீது கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அதே போல் பீகாரிலும் இரயில் பெட்டிகளை எரித்து, இரயில் நிலையங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் நாடு முழுவதும் 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Agnipath Scheme Protest: அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?
