உலகில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது, 18 வயதுக்கு முன்பாக 10.3 கோடி இந்தியர்கள் திருமணம் செய்கிறார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்கள் குறித்து ஆக்‌ஷன் எய்ட் இந்தியா ஆய்வு செய்து “ இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழிப்பது: வளர்ச்சி மற்றும் வாய்ப்பு’’ என்ற தலைப்பில் அறிக்கை வௌியிட்டது. அந்த அறிக்கையை நடிகையும், சமூக ஆர்வலருமான ஷபானா ஆஸ்மி நேற்று டெல்லியில் வௌியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

உலகில் ஒரு நிமிடத்துக்கு 28 பெண் குழந்தை திருமணம் நடக்கிறது. இதில், 2க்கும்மேற்பட்ட திருமணம் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் மட்டும் 18 வயதுக்கு குறைவாக 10.3 கோடி இந்தியர்கள் திருமணம் செய்கிறார்கள். இதில் 8.52 கோடி பெண் குழந்தைகள். ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் மக்களைத் தொகைக்காட்டிலும் பெண் குழந்தை திருமணம் நடக்கிறது.

பெண்குழந்தை திருமணத்தை ஒழிப்பதன் மூலம், குழந்தை பிறக்கும்போது தாய் இறக்கும் நிகழ்வுகளில் 27 ஆயிரம் பேரையும், 55 ஆயிரம் சிசு மரணத்தையும், 1.60 லட்சம் குழந்தைகள் மரணத்தையும் தடுக்கலாம்.

குழந்தை திருமணத்தின் வேர் என்பதே ஆணாதிக்கம்தான், குழந்தை திருமணத்தை முழுமையாக ஒழிப்பதன்மூலம் ஆணாதிக்கத்தை கையாளலாம். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், நம்பிக்கையை வளர்த்தல் ஆகியவை குழந்தை திருமணத்தை தடுக்க முடியும். குழந்தை திருமண எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்,  இதை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.

ஒரு சமூகத்தில் மூன்றில் ஒருபகுதி இப்படி குழந்தை திருமணத்தை செய்து கொண்டு வந்தால், அதை பன்பட்ட சமூகம் என்று கூற முடியாது. இந்த அறிக்கை சில அதிர்ச்சியான முடிவுகளை அளித்துள்ளதால், கவனமாக கையாள வேண்டும்.

பாடப்புத்தகங்களில் கூட அப்பா எங்கே? அலுவலகத்துக்கு இருக்கிறார். அம்மா எங்கே? அவர் சமையலறையில் இருக்கிறார். ஏன் அப்பாவும், அம்மாவும் அலுவலகத்தில் இருக்க முடியாது, அல்லது சமையலறையில் இருக்க கூடாது. பூதக்கண்ணாடி அணிந்து, பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் பாடங்களை பார்த்து, கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.