காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடனான மோதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் ஒரு வீரரின் உடல் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நேற்று காலை காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய பாது‌காப்பு படை வீரர்கள் சுட்டுக்‌கொன்றனர். பந்திபோரா மாவட்டத்தின் ஹாஜின் என்ற இடத்தில்‌ நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் மச்சில் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும்- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு வீரரின் உடல் சிதைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.