பெண்களை ஒருவர் கிண்டல் செய்தாலே மிகபெரிய குற்றமாக பார்க்கப்படும் நிலையில் சதீஷ்கரில் பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள் சிலருக்கு மட்டன் குழம்பு பார்ட்டி வைக்க சொல்லி வழங்கப்பட்ட தண்டனை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஸ்பூர் மாவட்டத்தில், மூன்று பெண்களை இளைஞர்கள் சிலர் கூடி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். இந்த பெண்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்தாளர்கள் குற்றவாளிகளை பிடித்து விசாரித்தனர்.

குற்றவாளிகள் தங்களுடைய குற்றங்களை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து, மட்டன் குழம்பு பார்ட்டி வைக்க சொல்லி உத்தரவிட்டனர்.

இதனால் டென்ஷன் ஆன பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பெண்கள் மீது தவறான அணுகு முறையில் நடந்து கொண்டால், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என பலர் குக்குரல் எழுப்பி வரும் நிலையில்... இந்த கிராம பஞ்சாயத்தின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.