Asianet News TamilAsianet News Tamil

ஆ.ராசா'வால் அலறிக் கிடக்கும் தொலைதொடர்பு துறை மேலதிகார வட்டாரம்... அது என்ன? அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

2G Saga Unfolds In upcoming book Raja trains guns on Vinod Rai Manmohan calls spectrum report trash
'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'
Author
First Published Jan 11, 2018, 1:54 PM IST


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அமைச்சராக இருந்த ஆ.ராசா கடைபிடித்த கொள்கையால் தேசத்துக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் என கொளுத்திப் போட்டார் தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய். இது நாட்டில் மிகப் பெரும் அரசியல் ஆழிப்பேரலையையே ஏற்படுத்தியது.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்தனர். ஆ. ராசா புத்தகம் ஒன்றை எழுதினார். "2G Saga Unfolds" என்ற தலைப்போடு வரும் 20ம் தேதி வெளியாகும் இந்த புத்தகத்தில் பல்வேறு வெளிவராத தகவல்களை ராசா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.  

'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'

இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரிந்துகொள்வதற்கு முன் சில விஷயங்களை விளக்கினார்...  2G  யால் தான் mobile கட்டணம் குறைந்தது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. 3ஜி மற்றும் 4ஜி அறிமுகமாவதற்கு காரணமே நாங்கள்தான். நான் தொலை தொடர்புத் துறையில் சந்தித்த சவால்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து புத்தகம் எழுதி வருகிறேன். சில வாரங்களில் அந்த புத்தகம் வெளி வர உள்ளது. பல உண்மைகள் அத புத்தகத்தின் வழியே வெளியாகும்.” என்றிருக்கிறார். இப்படி காங்கிரஸை டார்கெட் செய்து வந்த ராசாவின் இந்த புத்தகத்தால்  ஒட்டுமொத்தமாக  அலறி கிடக்கிறது தொலதொடர்பு துறை மேலதிகார வட்டாரம்.

'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'

மத்தியமைச்சராக பதவி வகித்த தொலைதொடர்பு துறையில் சிலரின் ஆதிக்கம் இருந்தது. நான் அதை முறியடிக்க விரும்பினேன். அதில் வெற்றியும் பெற்றேன். ’மன்மோகன் சிங்குக்கு 2ஜி பற்றி எதுவும் தெரியவில்லை. ராசாவை கைது செய்துவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமென நினைத்திருந்தார் மன்மோகன். அவர் நல்ல பிரதமர்தான், ஆனால் ஆட்சியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது அவரால்.” என்று வீதிக்கு வீதி விமர்சன வெடிகுண்டுகளை வீசிக் கொண்டே இருந்தார்.

ராசாவின் ரகளையான இந்த விமர்சனத்தால் அநியாயத்துக்கு நொந்தனர் தமிழக காங்கிரஸார். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் காங்கிரஸின் டெல்லி தலைமையின் கவனத்துக்கு பகிரப்பட்டது.  இந்த நேரத்தில் மன்மோகன் சிங்கிடமிருந்து ஆ.ராசாவுக்கு ஒரு வாழ்த்து கடிதம் வந்திருக்கிறது. அதில் ‘2ஜி வழக்கிலிருந்து குற்றமற்றவர் என விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது.’ என குறிப்பிட்டுள்ளார்.

'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'

சரி புத்தகத்தில் என்னதான் நடந்தது?

அரசின் இமேஜை காப்பாற்றிக்கொள்ள என்னை சிறை கம்பிகளின் பின்னால் தள்ளிவிட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசில் நிறைய சீனியர் வழக்கறிஞர்கள் இருந்தும், ஏன் உண்மையை வெளிக்கொண்டுவர அக்கறைப்படவில்லை என்பது வியப்பு 2ஜி வழக்கை அரசு நடத்திய விதம் நியாயத்திற்கு மாறானது. இப்படி பல ரகசியங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

அது என்ன? இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

வினோத் ராய் எனும் பாஜகவின் ஏஜெண்ட்டை பயன்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்த சதியை உணராத அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் என்னை பலிகடாவாக்கிவிட்டார். இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மவுனமும் மன்மோகன்சிங் எந்த ஒரு விளக்கமுமே தராமல் முழு அமைதி காத்ததும் இந்த தேசத்தின் மனசாட்சியை முடக்கி வைத்துவிட்டது. அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராயின் தோளில் வைக்கப்பட்ட துப்பாக்கியின் நான் இலக்காக்கப்பட்டேன்.

'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'

வினோத் ராய் கொடுத்த ரூ1.76 லட்சம் கோடி ஊழல் எனும் அறிக்கையால் தேசத்தின் கணக்குத் தணிக்கை துறை மீதான நம்பிக்கையே பறிபோய்விட்டது. அவரால்தான் நாட்டின் குக்கிராமங்களில் கூட ரூ1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டோம் என அப்போதே வதந்தி பரவியது. அவரால்தான் நமது தேசம் உலக நாடுகளிடையே ஊழல் தேசமாக அவமானப்பட்டது.  வினோத் ராய் கொடுத்த பொய்யான அறிக்கையால் இந்திய அரசு வெளிநாடுகளில் போட்டிருந்த ஒப்பந்தங்கள் மீதான நம்பகத்தன்மை  பறிபோனது. இதனால் இந்தியாவுக்கான  முதலீடுகள் முடங்கின. இப்படி தேசத்துக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியவர் உண்மையில் வினோத் ராய்தான்.

'2G Saga Unfolds': In upcoming book, Raja trains guns on Vinod Rai, Manmohan, calls spectrum report 'trash'

அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தது. அந்த அரசில் இருந்த சட்டவல்லுநர்கள் யாரும் எனக்கு ஆதரவாக உண்மையை கூற துணிந்து முன்வரவில்லை. இதற்கு மாறாக என்னை பலிகடவாக்கி சிறைக்கு அனுப்பி வைத்தார்கள்.  2ஜி வழக்குகளை மன்மோகன்  அரசு இரண்டாகப் பிரித்தது என்பதே அந்த அரசைப் பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும் எனக்கு எதிராக சிபிஐக்கான கூர்மையான வாளாகவும்தான் இருந்தது. தொலைத் தொடர்புத்துறையில் கோலோச்சி வந்த லாபிகளுக்கு எதிராக நான் போராடினேன். ஆனால்  மன்மோகன்சிங், அந்த லாபிகளுக்கு ஆதரவாளராக இருந்தார் என வெளிவுலகத்திற்கு தெரியாத பல ரகசியங்கள் இந்த புத்தகத்தில் உள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios