உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் 271 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்து 298 ஐ நெருங்கி இருக்கிறது. இதுவரையில் கர்நாடகா, டெல்லி, மகாராஸ்ரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருகின்றனர். ராஜஸ்தானில் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது.  பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

நாளை தேசிய சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி நாளை பொது போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் சுய ஊரடங்கை அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

கொரோனா கொடூரத்தின் முக்கியமான 3 மற்றும் 4 வது வாரம்..! எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை..!