சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சி மாறிய 276 வேட்பாளர்கள் : பிஎஸ்பி, காங்கிரஸுக்கு பாதிப்பு அதிகம்:ஏடிஆர் தகவல்

2022ம் ஆண்டு நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 276 வேட்பாளர்கள் தாங்கள் ஏற்கெனவே இருந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்குச் சென்று போட்டியி்ட்டுள்ளனர் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

276 candidates switched parties to contest 2022 assembly polls: ADR report

இதில் அதிகபட்சமாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 27 சதவீதம் பேரும், காங்கிரஸிலிருந்து 13 சதவீதம் பேரும் விலகி வேறு கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியி்ட்டுள்ளனர்.

276 candidates switched parties to contest 2022 assembly polls: ADR report

2022ம் ஆண்டில் உ.பி.உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்தும், 2017ம் ஆண்டு ஒரு கட்சியில் இருந்து போட்டியிட்டு 2022ம் ஆண்டு வேறு கட்சிக்கு சென்று போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்தும் ,அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்)  அறி்க்கை வெளியிட்டுள்ளது. 

அதில் 5 மாநிலத் தேர்தலில் மொத்தம் 276 வேட்பாளர்கள் கடந்த 2017ம் ஆண்டு ஒரு கட்சியில் சேர்ந்து போட்டியி்ட்டு 2022ம் ஆண்டு தேர்தலில் அந்தக் கட்சியிலிருந்து விலகி வேறுஒரு கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியி்ட்டுள்ளனர். 

276 candidates switched parties to contest 2022 assembly polls: ADR report

இதில் 75 வேட்பாளர்கள் அதாவது 27 சதவீதம் பேர் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர். அடுத்ததாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 13 சதவீதம் பேர் அதாவது 37 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர்.

2022ம் ஆண்டில் 54 வேட்பாளர்கள் அதாவது 20 சதவீதம் வேட்பாளர்கள் ஒரு கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து 35 வேட்பாளர்கள் அல்லது 13 சதவீதம் பேர் பாஜகவிலும், பகுஜன் சமாஜ் கட்சியில் 31வேட்பாளர்கள் சேர்ந்துள்ளனர்

276 candidates switched parties to contest 2022 assembly polls: ADR report

தேர்தலுக்காக வேறு கட்சியில் சேர்வதற்காக அதிகபட்சமாக பாஜகவிலிருந்து 32 சதவீதம் வேட்பாளர்கள் அதாவது 27 எம்எல்ஏக்கள் விலகியுள்ளனர், காங்கிரஸிலிருந்து 24 எம்எல்ஏக்கள் விலகினர். தேர்தலில் போட்டியிட்ட 85 எம்எல்ஏக்களில் 32 பேர் பாஜகவில் சேர்ந்து போட்டியி்ட்டனர், அதைத்தொடர்ந்து 19 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதிக் கட்சியில் சேர்ந்தும், காங்கிரஸில் 9 எம்எல்ஏக்களும் சேர்ந்து போட்டியிட்டனர்.
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios