8:55 AM IST
மக்களவை தேர்தல்... பாஜக, காங்கிரஸ் வென்ற சீட்கள் எவ்வளவு?
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5, ஜனசேனா 2 என மொத்தம் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. அதேபோல், இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 234 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸ் 99 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
4:49 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி!!
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
4:48 PM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.

4:47 PM IST
நானா? நீயா? தொடரும் போட்டி!!
நாடு முழுவதும் சுமார் 85% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன:
பாஜக 243 இடங்களில் முன்னிலை வகிக்கிறது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 19 இடங்கள்).
காங்கிரஸ் 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 15 இடங்கள்).
4:43 PM IST
7வது முறையாக தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி
தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார்.
4:35 PM IST
தருமபுரியில் திமுக வெற்றி; சவுமியா அன்புமணி தோல்வி!!
தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். முன்னிலை வகித்து வந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
4:16 PM IST
563 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை
விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் 11 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 563 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றுள்ளார்.
4:14 PM IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்?
இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4:11 PM IST
முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி
மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் விதிஷா தொகுதி பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றுள்ளார்.
4:08 PM IST
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி
உத்தரபிரேதச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தற்போது வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் அவர் போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் 3 லட்சத்திற்கும் மேலான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
4:06 PM IST
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
4:03 PM IST
40 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில் தற்போது திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
4:01 PM IST
குருவை முந்தவிடாமல் அடித்து ஆடும் சிஷ்யன்
தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 3,25,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 3,25,682
டிடிவி.தினகரன் (அமமுக)-1,58,710
நாராயணசாமி (அதிமுக) - 91,493
மதன் ஜெயபால்(நாம் தமிழர்)- 42,160
3:51 PM IST
2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர்கள்
திமுக வேட்பாளர்களில் பெரம்பலூர் அருண் நேரு 2,96,430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி 275276 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார். தஞ்சாவூர் முரசொலி 2,28,752; நீலகிரி ஆ.ராசா 2,11,680, ஶ்ரீபெரும்புதூர் டிஆர் பாலு 2,49,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
3:50 PM IST
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி மீண்டும் பின்னடைவு
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக வேட்பாளர் மணி 3,41,827 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,23,583 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
3:31 PM IST
சு வெங்கடேசன் வெற்றிக்கு நேரில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து!!
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.
3:17 PM IST
ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3:16 PM IST
இன்று மாலையே டெல்லிக்கு வாங்க... இண்டியா கூட்டணி கட்சி தலைவர்ளுக்கு அழைப்பு
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே, இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
3:07 PM IST
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வி!
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார்.
3:03 PM IST
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி மீண்டும் முன்னிலை
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பின்னடை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். சௌமியா அன்புமணி 8,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2:53 PM IST
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி பின்னடைவு
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். சௌமியா அன்புமணியை விட திமுக வேட்பாளர் 8,900 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2:49 PM IST
பாஜக அலுவலகத்துக்கு பிரதமர் வருகை!!
இன்று மாலை 7 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.
2:46 PM IST
இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பா?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இன்று மாலை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
2:44 PM IST
15 ஆண்டுகளுக்கு பிறகு 100 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 100 இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. இண்டியா கூட்டணியானது 234 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
2:43 PM IST
கோவையில் யார் முன்னிலை?
கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி
திமுக வேட்பாளர் கணபதி பா. ராஜ்குமார் முன்னிலை
இதுவரை வாக்கு விவரம்:
திமுக - 2,02,855
அதிமுக - 90,337
பாஜக - 1,63,842
வித்தியாசம் - 39,013 வாக்குகள்
2:40 PM IST
பாஜக உடன் கூட்டணி தொடரும் - நிதிஷ்குமார் அறிவிப்பு
பீகாரில் பாஜக உடன் கூட்டணி தொடரும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் 14 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், 13 இடங்களிலும் பாஜகவும் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2:36 PM IST
ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜக வெற்றி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜகவின் மஞ்சு சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
2:31 PM IST
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்: நடிகை ரோஜாவு தோல்வி முகம்!
ஆந்திர மாநிலம் நரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, TDP வேட்பாளரை விட 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
2:28 PM IST
இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம்.. சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்ட டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் பட்சத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2:23 PM IST
உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டிய இண்டியா கூட்டணி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 35 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 7, ஆர்எல்டி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
2:22 PM IST
ரேபரேலியில் தாயின் வெற்றியை முறியடித்த ராகுல் காந்தி!!
Lok Sabha election results: ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு தனது தாய் சோனியா காந்தியின் வெற்றி வித்தியாசத்தை முறியடித்து 2,22,219 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2:20 PM IST
திருவனந்தபுரம் தொகுதி சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2:19 PM IST
அமேதி மக்களுக்கு கிஷோரி லால் சர்மா நன்றி!!
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்மா, அமேதி மக்களுக்கும், காந்தி குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், வாக்கு எண்ணிக்கை முடியட்டும். அதன் பிறகு பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமேதியும் ஒன்று. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சியின் இரானிக்கும், காந்தி குடும்பத்தின் விசுவாசி கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2:09 PM IST
கங்கனா ரணாவத் வெற்றி!!
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜகவின் கங்கனா ரணாவத் வெற்றி
2:08 PM IST
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதியில் தோல்வி அடைந்த பாஜகவின் நயினார் நாகேந்திரன், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக கூறிவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்.
2:07 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா தோல்வி
கர்நாடகாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா தோல்வி அடைந்தார்.
1:54 PM IST
விருதுநகரில் வெற்றி தெரியும் முன்பு வெற்றி கொண்டாட்டம்!!
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி உள்ள நிலையில் வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
1:46 PM IST
விருதுநகரில் காங்கிரஸ் - தேமுதிக இடையே கடும் போட்டி.. 32 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர் முன்னிலை
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிகவின் விஜய பிரபாகர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
1:44 PM IST
ஓமர் அப்துல்லா தோல்வி!!
பாரமுல்லா தொகுதியில் ஓமர் அப்துல்லா தோல்வியை தழுவினார்
1:42 PM IST
கோவையில் யார் முன்னிலை?
கோவை நாடாளுமன்ற தொகுதி 4ஆவது சுற்று முடிவில்:
திமுக - 1,03,489
பாஜக - 81,095
அதிமுக - 42,791
திமுக 22,389 வாக்குகள் முன்னிலை
1:41 PM IST
நாட்டிலேயே இந்த தொகுதியில்தான் நோட்டா வாக்குகள் அதிகம்!!
இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1.7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. இது கோபால்கஞ்சின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டாவில் (NOTA) அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது. பீகாரில் கோபால்கஞ்ச் பெற்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க வாக்காளர்களுக்கு நோட்டா அனுமதிஅளிக்கிறது.
முந்தைய 2019 தேர்தலில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 51,660 நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்தத் தொகுதியில் பதிவாகி இருந்த மொத்த வாக்குகளில் இது 5 சதவீதமாகும்.
இந்தூரில் நோட்டா இதுவரை 1,72,798 வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 9,90,698 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தூரில் போட்டியிடும் மற்ற 13 வேட்பாளர்களும் நோட்டாவுடன் ஒப்பிடும்போது குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
1:27 PM IST
தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை!!
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் 1,02,887 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் பின்னடைவு
தேனி தொகுதி: 7 ஆம் சுற்று முடிவில்
திமுக - 1,92,496
அதிமுக - 49,005
அமமுக - 89,609
நாம் தமிழர் - 25,696
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,02,887 வாக்குகள் முன்னிலை. டிடிவி தினகரன் பின்னடைவு.
1:17 PM IST
திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ராஜூவ் சந்திரசேகர் தொடர்ந்து முன்னிலை
திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ராஜூவ் சந்திரசேகர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். 2 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
1:14 PM IST
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றுள்ளார். திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
1:12 PM IST
திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் முன்னிலை!!
திண்டுக்கல் தொகுதி நிலவரம் :-
சிபிஎம் வேட்பாளர் முன்னிலை
சுற்று எண் : 10 -வது முடிவு
திமுக கூட்டணி - சிபிஎம் : 312344
அதிமுக கூட்டணி - எஸ்டிபிஐ : 104752
பாஜக கூட்டணி - பாமக : 52083
நாதக - 45014
வித்தியாசம் : 2,07,592
1:10 PM IST
ராமநாதபுரம் தொகுதி நவாஸ் கனி முன்னிலை!!
ராமநாதபுரம் தொகுதி நான்காவது சுற்று நிலவரம்
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி- 97704
பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்- 50407.
அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் -21217.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா- 16725
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 47297 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
1:04 PM IST
50,000 வாக்கு வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 1,03,800 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக ஜெயபெருமாள் 35,795 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ஜெயபால் 11,676 வாக்குகளை பெற்றுள்ளார்.
12:57 PM IST
மதுரை மக்களவை தொகுதியில் 10ஆம் சுற்று முடிவில் சு. வெங்கடேசன் தொடர்ந்து முன்னிலை
சிபிஎம் சு. வெங்கடேசன் - 2,28,721
அதிமுக டாக்டர் சரவணன் - 1,11,383
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 1,12,661
நாம் தமிழர் சத்யா தேவி - 49,183
சிபிஎம் சு.வெங்கடேசன் 10ஆம் சுற்று முடிவில் 1,17,338 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
12:40 PM IST
கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா பின்னடைவு!!
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் மக்களவைத் தொகுதியில் 1,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பிரஜ்வால் 1,37,167 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் ஷ்ரேயாஸ் படேல் 1,35,721 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் (33) போட்டியிட்டார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரஜ்வால் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு சிறப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.
12:34 PM IST
8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில்
தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் 3-வது இடத்தில் உள்ளது. புதுச்சேரி, தென்காசி, நெல்லை, திருச்சி, நாகை, சிவகங்கை, ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
12:32 PM IST
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். சௌமியா அன்புமணி 1,26,025 வாக்குகள் பெற்று 19,568 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணியை விட முன்னிலையில் உள்ளார்.
12:14 PM IST
சிபிஎம் சு.வெங்கடேசன் முன்னிலை!!
மதுரை நாடாளுமன்றத் தொகுதி
8ஆம் சுற்று முடிவு
சிபிஎம் சு. வெங்கடேசன் - 1,85,202
அதிமுக டாக்டர் சரவணன் - 91,210
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 89,640
நாம் தமிழர் சத்யா தேவி - 40,017
சிபிஎம் சு.வெங்கடேசன் 8ஆம்சுற்று முடிவில் 93,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
12:05 PM IST
வெற்றி வாய்ப்பு குறைகிறதா?
200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 10,000 வாக்குகளுக்கும் குறைவாக பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே உள்ளன. இன்னும் பல சுற்றுகள் உள்ளன.
11:58 AM IST
மேற்கு வங்கத்தில் மாஸ் காட்டும் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 31 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.
11:57 AM IST
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.
11:55 AM IST
வயநாடு, ரேபரேலி தொகுதியிலும் ராகுல் முன்னிலை
வயநாடு தொகுதியில் 1.12 லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வரும் நிலையில், ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி 57, 729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
11:53 AM IST
மதுரையில் சிபிஐ (எம்) முன்னிலை!!
மதுரை
ஆறாவது சுற்று முடிவு.
CPI(M) - 1,36,487
ADMK - 71,886
BJP - 65,387
NTK - 30,601
LEAD :64,601
11:35 AM IST
கன்னியாகுமரியில் விஜய் வசந்த் முன்னிலை!!
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 45,579 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 22,115 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
11:28 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இழுபறி!!
இந்திய தேர்தல் ஆணைய இணையத்தின் தகவலின்படி, பாஜக 35 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான RLD இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாடி கட்சி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது, மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி தற்போது 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பு 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்தார். துவக்கத்தில் பின்னடவை சந்தித்த பிரதமர் மோடி, தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களில் 62 இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) 5 இடங்களிலும், அப்னா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
உத்தரபிரதேசத்தில் பாஜக 65 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
11:17 AM IST
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 15.009 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
11:06 AM IST
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 47,603 வாக்குகளுடன் 2ம் இடத்திலும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 23,368 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர்.
11:03 AM IST
சசிதரூர் மீண்டும் முன்னிலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் 1,920 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
11:02 AM IST
ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக?
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 61 தொகுதிகளிலும், ஆளும் பிஜு ஜனதா தளம் 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
10:57 AM IST
காலை 10.45 மணி முன்னிலை நிலவரம்
காலை 10.45 மணி முன்னிலை நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி - 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி - 221 இடங்களிலும், மற்றவை - 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
10:45 AM IST
நீலகிரியில் தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு
நீலகிரியில் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் ஆ.ராசா 21,205 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் எல்.முருகன் 2-வது இடத்தில் உள்ளார்.
10:36 AM IST
திமுக 36 தொகுதிகளில் முன்னிலை
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், 36 இடங்களில், அதிமுக 3 இடங்களிலும், பாஜகவும் ஒன்றில் முன்னிலையில் உள்ளது.
10:34 AM IST
தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனின் நிலை என்ன?
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். 2-வது இடத்தில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனும் 3-வது இடத்தில் அதிமுகவின் ஜெயவர்தனும் உள்ளனர். தமிழச்சி தங்கபாண்டியன் 38, 498 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழிசை 21,405 வாக்குகளும், அதிமுக 13,316 வாக்குகளும் பெற்றுள்ளது.
10:24 AM IST
பீகாரில் யார் முன்னிலை!!
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 29 இடங்களிலும், எதிர்க்கட்சியான இந்தியா 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மாநிலத்தில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
என்டிஏவின் தற்போது 29 தொகுதிகளில் முன்னிலை என்றாலும், கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 10 தொகுதிகளில் குறைவாகவே முன்னிலை வகித்து வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்ற எதிர்க்கட்சி, தற்போது 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இது ஆரம்பகட்ட நிலவரம் என்றாலும், இறுதியில் மாற்றங்கள் நிகழலாம்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது பெகுசராய் மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகித்தார். கயா லோக்சபா தொகுதியில், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) நிறுவனர் ஜிதன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) குமார் சர்வ்ஜீத்தை விட 1,962 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மாநிலம் முழுவதும் 36க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த இடங்களுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது
10:18 AM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.
10:00 AM IST
வாரணாசியில் மோடி முன்னிலை!!
வாரணாசி தொகுதியில் தற்போது பிரதமர் மோடி முன்னிலை வகித்து வருகிறார்.
9:50 AM IST
பாஜக முன்னிலை பெற்றுள்ள மாநிலங்கள்
உத்தர பிரதேசம், கர்நாடக, மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
9:48 AM IST
மகாராஷ்டிராவில் யார் முன்னிலை?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ) எதிர்க்கட்சியான இந்திய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய கூட்டணி தற்போது 24 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளில் பிளவுக்குப் பின்னர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தங்களது கட்சிகளில் இருந்து வெளியேறினர். இதற்குப் பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் களம் மாறி வருகிறது.
2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் பாஜக 23 இடங்களை வென்றது, அப்போது அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (பிரிக்கப்படாத) 18 இடங்களைப் பெற்றது. அப்போது பிரிக்கப்படாத என்சிபி நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது, அதேசமயம் காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.
9:47 AM IST
இந்தியா கூட்டணி முன்னிலை பெற்ற மாநிலங்கள்
தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, ஹரியானா, மேகாலாயா, உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
9:46 AM IST
உத்தரபிரதேசத்தில் மிரட்டும் இண்டியா கூட்டணி.. அதிர்ச்சியில் பாஜக
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், 9.30 மணி நிலவரப்படி அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் இண்டியா கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
9:34 AM IST
ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை!!
அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்ம்ருதி இரானி பின்னடைவு, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை. வயனாட்டிலும் ராகுல் காந்தி முன்னிலை.
9:23 AM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு சந்தித்து வருகிறார். அவரது எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னலையில் உள்ளார்.
9:18 AM IST
தேனி தொகுதியில் டிடிவி.தினகரன் பின்னடைவு
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
9:16 AM IST
வேலூர் தொகுதியில் யார் முன்னிலை?
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பின்னடைவை சந்தித்து வருகிறார். கதிர் ஆனந்த் 7,215 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 2,695 வாக்குகள் பெற்றுள்ளார்.
9:16 AM IST
சவுமியா அன்புமணி முன்னிலை!!
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
9:14 AM IST
தென் சென்னை தொகுதியில் தமிழிசைக்கு பின்னடைவு!
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை வகிக்கும் நிலையில், தமிழிசை பின்னடைவை சந்தித்துள்ளார்.
9:12 AM IST
தேனியில் யார் முன்னிலை?
தேனியில் திமுக முன்னிலை வகிக்கிறது.
9:11 AM IST
தமிழ்நாட்டில் திமுக முன்னிலை!!
தூத்துக்குடி, வேலூர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 26 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
9:11 AM IST
தருமபுரியில் மக்களவை தொகுதில் யார் முன்னிலை! திமுகவா? பாமகவா?
தருமபுரி மக்களவை தொகுதில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
9:10 AM IST
விளவங்கோடு இடைத்தேர்தல்... யார் முன்னிலை?
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலை வகிக்கிறார்.
9:09 AM IST
கோவையில் அண்ணாமலை பின்னடைவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.
9:06 AM IST
மகாராஷ்டிராவில் கடும் போட்டி
மகாராஷ்டிராவில் பாஜக, இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக தலைமயிலான கூட்டணி 26 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பிரிவினரை விட உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவினர் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
9:05 AM IST
திருநெல்வேலி யார் முன்னிலை?
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பின்னடைவு.
9:04 AM IST
வேலூரில் யார் முன்னிலை?
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை.
9:04 AM IST
திருப்பூரில் யார் முன்னிலை?
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை.
9:03 AM IST
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
9:03 AM IST
உத்தரப்பிரதேசத்தில் யார் முன்னிலை!!
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
9:02 AM IST
தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார்.
9:02 AM IST
வாரணாசி மோடி முன்னிலை!!
வாரணாசியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி முன்னிலை.
9:01 AM IST
துரை வைகோ முன்னிலை!!
திருச்சியில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை.
9:00 AM IST
32 தொகுதிகளில் திமுக முன்னிலை
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திமுக 32, அதிமுக 2, பாஜக 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
8:58 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் முன்னிலை
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி கட்சியும், மூன்றில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.
8:57 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள்: திருவனந்தபுரத்தில் சசி தரூரை தோற்கடிப்பாரா ராஜீவ் சந்திரசேகர்?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. சசி தரூரை பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
8:57 AM IST
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி முன்னிலை
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலை இருந்து வருகிறார்.
8:49 AM IST
திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களில் முன்னலையில் உள்ளது.
8:55 AM IST:
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5, ஜனசேனா 2 என மொத்தம் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. அதேபோல், இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 234 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸ் 99 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
4:49 PM IST:
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
4:48 PM IST:
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.
4:48 PM IST:
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.
4:47 PM IST:
நாடு முழுவதும் சுமார் 85% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன:
பாஜக 243 இடங்களில் முன்னிலை வகிக்கிறது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 19 இடங்கள்).
காங்கிரஸ் 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 15 இடங்கள்).
4:43 PM IST:
தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார்.
4:35 PM IST:
தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். முன்னிலை வகித்து வந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
4:16 PM IST:
விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் 11 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 563 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றுள்ளார்.
4:14 PM IST:
இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4:11 PM IST:
மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் விதிஷா தொகுதி பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றுள்ளார்.
4:08 PM IST:
உத்தரபிரேதச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தற்போது வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் அவர் போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் 3 லட்சத்திற்கும் மேலான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
4:06 PM IST:
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
4:03 PM IST:
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில் தற்போது திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
4:01 PM IST:
தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 3,25,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 3,25,682
டிடிவி.தினகரன் (அமமுக)-1,58,710
நாராயணசாமி (அதிமுக) - 91,493
மதன் ஜெயபால்(நாம் தமிழர்)- 42,160
3:51 PM IST:
திமுக வேட்பாளர்களில் பெரம்பலூர் அருண் நேரு 2,96,430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி 275276 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார். தஞ்சாவூர் முரசொலி 2,28,752; நீலகிரி ஆ.ராசா 2,11,680, ஶ்ரீபெரும்புதூர் டிஆர் பாலு 2,49,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
3:54 PM IST:
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக வேட்பாளர் மணி 3,41,827 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,23,583 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
3:33 PM IST:
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.
3:17 PM IST:
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3:16 PM IST:
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே, இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
3:07 PM IST:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார்.
3:03 PM IST:
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பின்னடை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். சௌமியா அன்புமணி 8,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2:55 PM IST:
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். சௌமியா அன்புமணியை விட திமுக வேட்பாளர் 8,900 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2:49 PM IST:
இன்று மாலை 7 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.
2:46 PM IST:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இன்று மாலை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
2:44 PM IST:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 100 இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. இண்டியா கூட்டணியானது 234 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
2:43 PM IST:
கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி
திமுக வேட்பாளர் கணபதி பா. ராஜ்குமார் முன்னிலை
இதுவரை வாக்கு விவரம்:
திமுக - 2,02,855
அதிமுக - 90,337
பாஜக - 1,63,842
வித்தியாசம் - 39,013 வாக்குகள்
2:40 PM IST:
பீகாரில் பாஜக உடன் கூட்டணி தொடரும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் 14 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், 13 இடங்களிலும் பாஜகவும் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2:36 PM IST:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜகவின் மஞ்சு சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
2:31 PM IST:
ஆந்திர மாநிலம் நரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, TDP வேட்பாளரை விட 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
2:28 PM IST:
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் பட்சத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2:23 PM IST:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 35 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 7, ஆர்எல்டி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
2:22 PM IST:
Lok Sabha election results: ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு தனது தாய் சோனியா காந்தியின் வெற்றி வித்தியாசத்தை முறியடித்து 2,22,219 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2:20 PM IST:
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
2:19 PM IST:
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்மா, அமேதி மக்களுக்கும், காந்தி குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், வாக்கு எண்ணிக்கை முடியட்டும். அதன் பிறகு பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமேதியும் ஒன்று. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சியின் இரானிக்கும், காந்தி குடும்பத்தின் விசுவாசி கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2:09 PM IST:
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜகவின் கங்கனா ரணாவத் வெற்றி
2:08 PM IST:
திருநெல்வேலி தொகுதியில் தோல்வி அடைந்த பாஜகவின் நயினார் நாகேந்திரன், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக கூறிவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்.
2:10 PM IST:
கர்நாடகாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா தோல்வி அடைந்தார்.
1:54 PM IST:
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி உள்ள நிலையில் வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
1:47 PM IST:
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிகவின் விஜய பிரபாகர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
1:44 PM IST:
பாரமுல்லா தொகுதியில் ஓமர் அப்துல்லா தோல்வியை தழுவினார்
1:42 PM IST:
கோவை நாடாளுமன்ற தொகுதி 4ஆவது சுற்று முடிவில்:
திமுக - 1,03,489
பாஜக - 81,095
அதிமுக - 42,791
திமுக 22,389 வாக்குகள் முன்னிலை
1:41 PM IST:
இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1.7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது. இது கோபால்கஞ்சின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டாவில் (NOTA) அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது. பீகாரில் கோபால்கஞ்ச் பெற்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க வாக்காளர்களுக்கு நோட்டா அனுமதிஅளிக்கிறது.
முந்தைய 2019 தேர்தலில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 51,660 நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்தத் தொகுதியில் பதிவாகி இருந்த மொத்த வாக்குகளில் இது 5 சதவீதமாகும்.
இந்தூரில் நோட்டா இதுவரை 1,72,798 வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 9,90,698 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தூரில் போட்டியிடும் மற்ற 13 வேட்பாளர்களும் நோட்டாவுடன் ஒப்பிடும்போது குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
1:27 PM IST:
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் 1,02,887 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் பின்னடைவு
தேனி தொகுதி: 7 ஆம் சுற்று முடிவில்
திமுக - 1,92,496
அதிமுக - 49,005
அமமுக - 89,609
நாம் தமிழர் - 25,696
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,02,887 வாக்குகள் முன்னிலை. டிடிவி தினகரன் பின்னடைவு.
1:17 PM IST:
திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ராஜூவ் சந்திரசேகர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். 2 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
1:14 PM IST:
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றுள்ளார். திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
1:12 PM IST:
திண்டுக்கல் தொகுதி நிலவரம் :-
சிபிஎம் வேட்பாளர் முன்னிலை
சுற்று எண் : 10 -வது முடிவு
திமுக கூட்டணி - சிபிஎம் : 312344
அதிமுக கூட்டணி - எஸ்டிபிஐ : 104752
பாஜக கூட்டணி - பாமக : 52083
நாதக - 45014
வித்தியாசம் : 2,07,592
1:10 PM IST:
ராமநாதபுரம் தொகுதி நான்காவது சுற்று நிலவரம்
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி- 97704
பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்- 50407.
அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் -21217.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா- 16725
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 47297 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
1:04 PM IST:
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 1,03,800 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக ஜெயபெருமாள் 35,795 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ஜெயபால் 11,676 வாக்குகளை பெற்றுள்ளார்.
12:57 PM IST:
சிபிஎம் சு. வெங்கடேசன் - 2,28,721
அதிமுக டாக்டர் சரவணன் - 1,11,383
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 1,12,661
நாம் தமிழர் சத்யா தேவி - 49,183
சிபிஎம் சு.வெங்கடேசன் 10ஆம் சுற்று முடிவில் 1,17,338 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
12:40 PM IST:
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் மக்களவைத் தொகுதியில் 1,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பிரஜ்வால் 1,37,167 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் ஷ்ரேயாஸ் படேல் 1,35,721 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் (33) போட்டியிட்டார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரஜ்வால் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு சிறப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.
12:34 PM IST:
தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் 3-வது இடத்தில் உள்ளது. புதுச்சேரி, தென்காசி, நெல்லை, திருச்சி, நாகை, சிவகங்கை, ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
12:32 PM IST:
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். சௌமியா அன்புமணி 1,26,025 வாக்குகள் பெற்று 19,568 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணியை விட முன்னிலையில் உள்ளார்.
12:14 PM IST:
மதுரை நாடாளுமன்றத் தொகுதி
8ஆம் சுற்று முடிவு
சிபிஎம் சு. வெங்கடேசன் - 1,85,202
அதிமுக டாக்டர் சரவணன் - 91,210
பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 89,640
நாம் தமிழர் சத்யா தேவி - 40,017
சிபிஎம் சு.வெங்கடேசன் 8ஆம்சுற்று முடிவில் 93,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
12:05 PM IST:
200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 10,000 வாக்குகளுக்கும் குறைவாக பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே உள்ளன. இன்னும் பல சுற்றுகள் உள்ளன.
11:58 AM IST:
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 31 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.
11:57 AM IST:
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.
11:55 AM IST:
வயநாடு தொகுதியில் 1.12 லட்சம் வாக்குகள் முன்னிலை வகித்து வரும் நிலையில், ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி 57, 729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
11:53 AM IST:
மதுரை
ஆறாவது சுற்று முடிவு.
CPI(M) - 1,36,487
ADMK - 71,886
BJP - 65,387
NTK - 30,601
LEAD :64,601
11:35 AM IST:
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 45,579 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 22,115 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
11:28 AM IST:
இந்திய தேர்தல் ஆணைய இணையத்தின் தகவலின்படி, பாஜக 35 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான RLD இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாடி கட்சி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது, மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி தற்போது 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பு 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இதே தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்தார். துவக்கத்தில் பின்னடவை சந்தித்த பிரதமர் மோடி, தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
2019 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 80 இடங்களில் 62 இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) 5 இடங்களிலும், அப்னா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
உத்தரபிரதேசத்தில் பாஜக 65 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
11:17 AM IST:
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 15.009 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
11:06 AM IST:
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 47,603 வாக்குகளுடன் 2ம் இடத்திலும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 23,368 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர்.
11:03 AM IST:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் 1,920 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
11:02 AM IST:
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 61 தொகுதிகளிலும், ஆளும் பிஜு ஜனதா தளம் 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
10:57 AM IST:
காலை 10.45 மணி முன்னிலை நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி - 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி - 221 இடங்களிலும், மற்றவை - 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
10:45 AM IST:
நீலகிரியில் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் ஆ.ராசா 21,205 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் எல்.முருகன் 2-வது இடத்தில் உள்ளார்.
10:36 AM IST:
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், 36 இடங்களில், அதிமுக 3 இடங்களிலும், பாஜகவும் ஒன்றில் முன்னிலையில் உள்ளது.
10:34 AM IST:
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். 2-வது இடத்தில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனும் 3-வது இடத்தில் அதிமுகவின் ஜெயவர்தனும் உள்ளனர். தமிழச்சி தங்கபாண்டியன் 38, 498 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தமிழிசை 21,405 வாக்குகளும், அதிமுக 13,316 வாக்குகளும் பெற்றுள்ளது.
10:24 AM IST:
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 29 இடங்களிலும், எதிர்க்கட்சியான இந்தியா 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மாநிலத்தில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
என்டிஏவின் தற்போது 29 தொகுதிகளில் முன்னிலை என்றாலும், கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 10 தொகுதிகளில் குறைவாகவே முன்னிலை வகித்து வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்ற எதிர்க்கட்சி, தற்போது 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இது ஆரம்பகட்ட நிலவரம் என்றாலும், இறுதியில் மாற்றங்கள் நிகழலாம்.
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது பெகுசராய் மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகித்தார். கயா லோக்சபா தொகுதியில், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) நிறுவனர் ஜிதன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) குமார் சர்வ்ஜீத்தை விட 1,962 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மாநிலம் முழுவதும் 36க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த இடங்களுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது
10:18 AM IST:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.
10:00 AM IST:
வாரணாசி தொகுதியில் தற்போது பிரதமர் மோடி முன்னிலை வகித்து வருகிறார்.
9:50 AM IST:
உத்தர பிரதேசம், கர்நாடக, மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
9:48 AM IST:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ) எதிர்க்கட்சியான இந்திய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய கூட்டணி தற்போது 24 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளில் பிளவுக்குப் பின்னர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தங்களது கட்சிகளில் இருந்து வெளியேறினர். இதற்குப் பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் களம் மாறி வருகிறது.
2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் பாஜக 23 இடங்களை வென்றது, அப்போது அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (பிரிக்கப்படாத) 18 இடங்களைப் பெற்றது. அப்போது பிரிக்கப்படாத என்சிபி நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது, அதேசமயம் காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.
9:47 AM IST:
தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, ஹரியானா, மேகாலாயா, உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
9:46 AM IST:
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், 9.30 மணி நிலவரப்படி அங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் இண்டியா கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
9:34 AM IST:
அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்ம்ருதி இரானி பின்னடைவு, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை. வயனாட்டிலும் ராகுல் காந்தி முன்னிலை.
9:25 AM IST:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு சந்தித்து வருகிறார். அவரது எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னலையில் உள்ளார்.
9:18 AM IST:
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
9:16 AM IST:
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பின்னடைவை சந்தித்து வருகிறார். கதிர் ஆனந்த் 7,215 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 2,695 வாக்குகள் பெற்றுள்ளார்.
9:16 AM IST:
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
9:14 AM IST:
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை வகிக்கும் நிலையில், தமிழிசை பின்னடைவை சந்தித்துள்ளார்.
9:12 AM IST:
தேனியில் திமுக முன்னிலை வகிக்கிறது.
9:11 AM IST:
தூத்துக்குடி, வேலூர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 26 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
9:11 AM IST:
தருமபுரி மக்களவை தொகுதில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.
9:10 AM IST:
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலை வகிக்கிறார்.
9:09 AM IST:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.
9:06 AM IST:
மகாராஷ்டிராவில் பாஜக, இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக தலைமயிலான கூட்டணி 26 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பிரிவினரை விட உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவினர் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
9:05 AM IST:
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பின்னடைவு.
9:04 AM IST:
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை.
9:04 AM IST:
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை.
9:03 AM IST:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
9:03 AM IST:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
9:02 AM IST:
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார்.
9:02 AM IST:
வாரணாசியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி முன்னிலை.
9:01 AM IST:
திருச்சியில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை.
9:00 AM IST:
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திமுக 32, அதிமுக 2, பாஜக 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
8:58 AM IST:
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி கட்சியும், மூன்றில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.
8:57 AM IST:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. சசி தரூரை பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
8:57 AM IST:
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலை இருந்து வருகிறார்.
8:49 AM IST:
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களில் முன்னலையில் உள்ளது.
8:47 AM IST:
கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது. ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டு செலுத்திய பெட்டிகளை எடுத்து வந்து அவற்றை பிரித்து எண்ணும் பணிகளை அலுவலர்கள் துவங்கினர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
8:45 AM IST:
நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தபால் வாக்குகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
8:44 AM IST:
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டிலும் ராகுல் காந்தி தபால் வாக்குகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
8:41 AM IST:
இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட, நடிகை கங்கனா ரனாவத் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
8:40 AM IST:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
8:38 AM IST:
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஒரு இடங்களில் முன்னணியில் உள்ளது.
8:20 AM IST:
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போதைய நிலவரப்படி 157 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 62 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
8:18 AM IST:
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னையில் முன்னிலை.
8:17 AM IST:
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 07 இடங்களில் முன்னணியில் உள்ளது.
8:03 AM IST:
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 11 மணியளவில் முன்னணி நிலவரங்களுடன், அடுத்து மத்தியில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.
7:40 AM IST:
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
7:39 AM IST:
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படும்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட முகவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கப்படுவதாகும் நெருக்கடி ஏற்படுவதாகவும் முகவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
7:27 AM IST:
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தந்துள்ளார்.
7:11 AM IST:
வாக்கு எண்ணிக்டிக நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐ பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பி அட்டை, 17சி நகல் ஆகியவற்றை கொண்டு செல்லலாம்.
7:06 AM IST:
ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படும் நீலகிரி மக்களவைத் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரான திமுக வேட்பாளர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சராக உள்ள பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
6:52 AM IST:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூம் அறையில் வைக்கப்பட்ட 6590 தபால் வாக்குகள் அடங்கிய 8 பெட்டிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
6:44 AM IST:
சென்னையில் வட சென்னை தொகுதிக்கு ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
6:41 AM IST:
தமிழகத்தில் திமுக பாஜகவுக்கு இடையே தான் போட்டி என்று கூறிவரும் நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.
6:35 AM IST:
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படும் நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவப் படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
6:13 AM IST:
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் கடும் சோதனைக்கு பின் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பப்படுகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
6:11 AM IST:
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் சரியாக காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்படும். கட்சி முகவர்களுக்கு எண்ணிக்கை தெரிவிக்கப்படும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கினாலும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.