அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் டிமேட் அக்கவுண்டில் திடீரென ரூ.11ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் டிமேட் அக்கவுண்டில் திடீரென ரூ.11ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரமேஷ் சாகர் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்து வருகிறார். இவர் கடந்த வருடம் கொடாக்கில் டிமேட் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்துள்ளார். 

இதையும் படிங்க: வைரஸ் காய்ச்சல் பரவுவதன் எதிரொலி... புதுவையில் நாளை முதல் செப்.25 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

கடந்த ஜூலை மாதல் இவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் கணக்கில் ரூ.11 ஆயிரம் கோடி பணம் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் முதலீடு செய்த பணம் 2 கோடி என்ற நிலையில் 11ஆயிரம் கோடி வந்துள்ளது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே மொத்த பணத்தையும் வங்கி திரும்பபெற்றுள்ளது.

இதையும் படிங்க: 56 இன்ச் மோடி ஜி தாலி அறிமுகம்... சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம்.. அறிவித்த டெல்லி உணவகம்!!

நடந்த டெக்கினிக்கல் பிரச்னை குறித்தும் வங்கியில் இருந்து ரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ரமேஷ் மட்டுமல்ல அன்று பலருக்கும் அப்படியான நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கொடாக்கிடம் விளக்கம் கேட்கையில், பயனர்களின் அக்கவுண்ட் மற்றும் பான் கார்டு விவரங்கள் தெரியாமல் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தது.