Asianet News TamilAsianet News Tamil

தண்ணி அடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்!! பைக் ரேஸ்... ஸ்பீடா ஓட்டுபவர்களுக்கும் ஆப்பு!! அவசர அவசரமாக வரும் புதிய சட்டம்...

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்,  10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பந்தயத்தில் ஈடுபடுதல், வேகமாக வாகனத்தை ஓட்டுதல்,  போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக புதிய சட்ட மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்கப்பட உள்ளது.

10K Fine for Drunk Driving, 5K For No License: 10 Facts About the New Motor Bill
Author
Delhi, First Published Jun 26, 2019, 5:09 PM IST

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்,  10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பந்தயத்தில் ஈடுபடுதல், வேகமாக வாகனத்தை ஓட்டுதல்,  போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக புதிய சட்ட மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்கப்பட உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்வதற்கான சட்ட மசோதா முந்தைய மத்திய பிஜேபி  ஆட்சியின் போதே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில்  எதிர்ப்பு எழவே அது கைவிடப்பட்டது. ஆட்சி முடிந்து மக்களவை கலைக்கப்படவே, அந்த மசோதா காலாவதியாகி விட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்களின் ஆலோசனைகளோடு அதே மசோதாவானது சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மசோதாவில் மீண்டும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரித்து வசூலிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.இந்த மசோதா நிறைவேறினால், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், 100 ரூபாய் அபராதத் தொகைக்‍கு பதிலாக, அபராதமானது ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

அதேபோல, தலைக்கவசம் அணியாவிட்டால், அபராதம், ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதுடன், சுமார் 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறலுக்கு தற்போது 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை 500ல் இருந்து 10,000 ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும். சரக்கு  அடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். பந்தயத்தில் ஈடுபடுதல், வேகமாக வாகனத்தை ஓட்டுதல்,  போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக  வழிவகை செய்யுமாம் இந்த மசோதா .

அடுத்ததாக, அதிக அளவும் பாரம் ஏற்றினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, டன்னுக்கு தலா 2 000 வீதம், சிறுவர்கள் வாகனம் ஓட்டி, விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டால்,  வாகன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். வாகனப் பதிவும் ரத்து செய்யப்படும். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் நபர்களால் பாதிக்கப்படுவோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மோசமான சாலைகளால் விபத்து ஏற்பட்டால், ஒப்பந்ததாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் புதிய மசோதா வழிவகை செய்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios