#BREAKING : யமுனோத்ரி நெடுஞ்சாலையில் விபத்து.. 10,000 பேர் சிக்கி தவிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் !
Char Dham Yatra : உத்தரகாண்ட் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததால் 10,000 பேர் சிக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த தலங்கள் மூடப்பட்டு இருக்கும். கோடை காலத்தில் திறக்கப்படும். கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த மே 6ம் தேதி கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்டது முதல் தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 10,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுஞ்சாலையின் பாதுகாப்புச் சுவர் உள்வாங்கியதால் இது நடந்துள்ளது என்றும், சாலையை மீண்டும் திறக்க 3 நாட்களுக்கு மேல் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. யமுனோத்ரி கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் 10,000 பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் 10,000 பேர் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. சிறிய வாகனங்களில் இருந்து பயணிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வரும் நிலையில், வெகு தூரத்தில் இருந்து பெரிய வாகனங்களில் வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!