ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றால், ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி பெண்கள் பல்கலைக்கழகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ குழந்தைகள் தங்கள் படிப்பையும், தங்கள் செயலையும் மகிழ்ச்சியாக அனுபவித்து செய்ய வேண்டும்.  சிறிய கண்டுபிடிப்புகள் தான் பெரிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கு அழைத்துச் செல்லும். ஆந்திர மாநிலத்தில் இருந்து நோபல் பரிசு வெல்பவர்களுக்கு அரசு சார்பில் ரூ.100 கோடி வெகுமதி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.