வீடு கட்ட போறீங்களா.? நம் வீட்டில் எது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..? 

மின் இணைப்பு

வீட்டிற்கான மின் பராமரிப்பு பாதுகாப்பான முறையில் அமைத்திடல் வேண்டும். ஒரு வீடு அதன் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். எனவே வீட்டுப்பாதுகாப்பிற்கு சாதகமான எல்லாவற்றிற்கும் முன்னுரிமை அளித்து தரமான பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும்.

கூரை

நம் வீட்டின் கூரை காற்று, மழை, பனி, ஆலங்கட்டி மற்றும் வெப்பத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் அதிக வெப்பம் மற்றும் மாறி வரும் கால நிலைக்கு ஏற்ப நமக்கு முழு பாதுகாப்பை வழங்குகிறது. நம் வீட்டு கூரையின் ஸ்திரத்தன்மை மற்றும் தரம் தான் வலுவான கட்டுமானத்திற்கு வழி வகுக்கிறது.  

குழாய்கள்

ஒரு கட்டிடத்தை திட்டமிடும்போது பிளம்பிங் வேலை மிக முக்கியமான வேலைகளில் ஒன்றாகும். ஒரு பிளம்பர் உதவியின்றி எந்த கட்டிடத்தையும் முடிக்க முடியாது. பிளம்பிங் வேலையில் குழாய் இணைப்புகள், வடிகால் குழாய்கள், வால்வுகள் மற்றும் ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்ட பிற சாதனங்கள் ஆகியவை அடங்கும். இத்தனை சிறப்பம்சங்களும் சீராக இருந்தால் தான் குழாய்களில் தண்ணீர் வசதி இடையூறு  இல்லாமல் கிடைக்கும்

வீட்டின் தங்கும் அறை ..!

நம் வீட்டின் அறைகள், ஒன்றோடு ஒன்று இணைப்பு பெற்று இருக்கும் அல்லவா..? ஆம் இந்த அறைகள் முன் திசையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் நன்கு ஒளி பெரும் வகையிலும் மற்றும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். வீட்டின் அறைகள் நன்கு விசாலமாக அமைந்தால் பல சுப நிகழ்ச்சிகள் கூட வீட்டிலேயே நடத்த முடியும்

பொது விஷயம்

உங்களுக்கு பிடித்த பொருட்களை பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்து நம் வீட்டில் வைத்து அழகு பாப்போம் அல்லவா.? அதில் வீடு கட்டப்படும் விதத்திற்கு மிக முக்கிய கவனம் செலுத்த  வேண்டியது அவசியம். எனவே நம் கனவு இல்லத்தை கட்டும் போது மேற்குறிப்பிட்ட  விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.