MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இனி 13 லட்சம் டெபாசிட் பண்ணா தான் அமெரிக்கா போக முடியும்.. ட்ரம்பின் அடுத்த கிறுக்குத்தனம்

இனி 13 லட்சம் டெபாசிட் பண்ணா தான் அமெரிக்கா போக முடியும்.. ட்ரம்பின் அடுத்த கிறுக்குத்தனம்

அமெரிக்கா சுற்றுலா விசா பெறுவது இனி கடினமாகலாம். பயணிகள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கலாம். விதிமீறல்கள் இருந்தால் டெபாசிட் பணத்தை இழக்க நேரிடும்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 06 2025, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.13 லட்சம் டெபாசிட் விசா
Image Credit : Asianet News

ரூ.13 லட்சம் டெபாசிட் விசா

அமெரிக்கா டூரிஸ்ட் விசா வாங்குறதுக்கே இனிமேல் கடினமான நிலைமை உருவாகப் போகுது என்றே கூறலாம். இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கு விசா தரும் முன் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யணும் என்ற திட்டம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அமெரிக்கா டூரிஸ்ட் விசா
Image Credit : social media

அமெரிக்கா டூரிஸ்ட் விசா

இந்த திட்டத்தின்படி, அமெரிக்கா வரும் பயணிகள் ரூ.13 லட்சம் (அல்லது 15,000 அமெரிக்க டாலர்கள்) வரை முன்பணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை, பயணிகள் அவர்கள் விதிகளை மீறாமல் நாடு திரும்புகிறாரா என்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா அரசு வைத்திருக்கும் பாதுகாப்பு டெபாசிட் மாதிரியானது என்று கூறப்படுகிறது. ஒரு பயணி தங்கவேண்டிய காலத்துக்கு மேல் தங்கினால், அவர் இந்த டெபாசிட் பணத்தை இழக்க நேரிடும்.

34
டொனால்ட் ட்ரம்ப்
Image Credit : Google

டொனால்ட் ட்ரம்ப்

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்நாடுகளின் சில பயணிகள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விதிகளை மீறியதாக பதிவு இருக்கின்றது என்பதால், ட்ரம்ப் இந்த திட்டத்தை முன்னிறுத்துகிறார். வெறும் சுற்றுலா பார்க்கவே அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள் இந்த திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

44
அமெரிக்கா விசா புதிய விதிகள்
Image Credit : Asianet News

அமெரிக்கா விசா புதிய விதிகள்

ஏற்கனவே விமான டிக்கெட், தங்கும் இடம், கையிருப்பு பணம் என செலவுகள் அதிகமிருக்க, ரூ.13 லட்சம் டெபாசிட் கட்டணமாக கொடுப்பது மிகவும் கடினம் தான். அதுமட்டுமின்றி விசா காலம் முடிந்தவர்களும் ரூ.13 லட்சம் ரூபாயை கட்ட வேண்டிய சூழல் ஏற்படலாம். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள், எதிர்கால பயணத் திட்டங்களை சற்று எச்சரிக்கையுடன் திட்டமிடுவது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டொனால்ட் டிரம்ப்
உலகம்
பயணம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த நாட்டுல நைட் 10 மணிக்கு மேல டாய்லெட் ஃப்ளஷ் பண்ணா ஜெயிலா? உண்மை என்ன?
Recommended image2
Indian Pilot : நடுவானில் கத்திக்குத்து.. 14,000 அடி கீழே பாய்ந்த விமானம்! 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி!
Recommended image3
ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!
Related Stories
Recommended image1
பேமிலியா டூர் போக ஏற்ற பட்ஜெட் கார்கள்.. வெயிட் பண்ணுங்க மக்களே!
Recommended image2
ரஷ்யாவில் சுனாமி ஏற்படும்.. அன்றே கணித்த புதிய பாபா வாங்கா.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved