மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்! டவுட் ஹாட்ரிக் அடித்த ஃபின்லாந்து! அப்படின்னா இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து 6வது முறையாக ஃபின்லாந்து அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா அடிமட்டத்தில் பின்தங்கியுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி ''சர்வதேச மகிழ்ச்சி நாள்'' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐநாவின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகளை அமைப்பு வெளியிட்டது. தொடர்ச்சியாக 11வது ஆண்டாக இந்த மகிழ்ச்சிய நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளின் சராசரி தரவுகளின் ஆடிப்படையில் 150 நாடுகளில் தரவுகள் எடுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), ஆயுட்காலம், வாழ்க்கை சுதந்திரம், சமூக ஆதரவு, குற்றவியல நடவடிக்கைகள், ஊழல் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக உலகமே கொரோனா பிடியில் சிக்கி தவித்ததால், கொரோவில் சிக்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீட்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும், மக்கள் நலன் குறித்த அந்தந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்ககு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 1வது இடத்தில் ஃபின்லாந்து, 2வது இடத்தில் டென்மார்க மற்றும் 3வது இடத்தில் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 5வது இடத்தில் இருந்த இஸ்ரேல் ஒரு படி முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களிலும் ஐரோப்பிய நாடுகளே பிடித்துள்ளன. அமெரிக்கா 15வது இடத்தையும், போரில் சிக்கி தவிக்கும் உக்ரைன் 92வது இடத்தை பிடித்துள்ளன.
17 மணி நேரம் தூங்காமல் கேம் விளையாடிய சிறுவன்.. மகனுக்கு தந்தை அளித்த வினோத தண்டனை - என்ன தெரியுமா?
இந்தியா..!
137 நாடுகள் கொண்ட ஆசிய நாடுகளில் இந்தியா 126வது இடத்தை பிடித்துள்ளது. அண்மை நாடுகளான நேபாளம் 78வது இடத்தையும், சீனா 64வது இடத்தையும், வங்கதேசம் 117வது இடத்தையும், இலங்கை 112வது இடத்தையும் பிடித்துள்ளன. தாலிபன்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் 137வது இடத்தை பிடித்துள்ளது. இதுவே கடைசி இடம் மற்றும் மகிழ்ச்சியில்லாத நாடு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.