சவுதி அரேபியாவின் தூங்கும் இளவரசர்; நெஞ்சை உருக்கும் துயரக் கதை
சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், 20 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். 2005ல் ஏற்பட்ட கார் விபத்தினால் கோமா நிலைக்குச் சென்ற அவர், சிறிய அசைவுகளைக் காட்டுவதால் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Sleeping prince of Saudi Arabia
சவுதி அரேபியாவின் தூங்கும் இளவரசர் என்று அடிக்கடி அழைக்கப்படும் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், ஏப்ரல் 18ஆம் தேதி அமைதியாக தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல உலகம் மாறிவரும் நிலையில், தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் அவர் குணமடைய வேண்டும் என்பதற்காக உலகமே பிரார்த்தனை செய்துவருகிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இளவரசர் அல்-வலீத் கோமா நிலையில் இருக்கிறார். 2005ஆம் ஆண்டு ஒரு ராணுவக் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட கார் விபத்தின் விளைவாக அவர் கோமா நிலைக்குச் சென்றார். அப்போது அவருக்கு 18 வயதுதான்.
Who is Sleeping prince?
இளவரசர் காலித் பின் தலாலின் மகனும், சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த அல்-வலீத்தின் துயரக் கதை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்துவிட்டது.
அவர் உயிர்காக்கும் இயந்திரங்களுடன் கோமாவில் இருப்பதைக் காட்டும் படங்களை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர். மிக அபூர்வமாக அவ்வப்போது சிறிய அசைவுகள் மட்டுமே அவரது உடலில் காணப்படுகின்றன. ஆனால், அவை அவரது அன்புக்குரியவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
Sleeping prince age
ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இளவரசர் காலித்தும் அவரது குடும்பத்தினரும் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள். மீண்டு வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் கூட, உயிர்காக்கும் கருவிகளைத் திரும்பப் பெற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இளவரசர் அல்-வலீத் தனது விரல்களை லேசாக அசைக்கும் காட்சி 2020ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலானது. 2019ஆம் ஆண்டில், இளவரசர் தனது தலையை லேசாக அசைக்கும் வீடியோவும் வெளிவந்தது. இந்த வீடியோவும் சமூக ஊடக தளங்களில் வைரலாகப் பரவியது.
Sleeping prince treatment
பலர் அவர் இன்னும் உயிருடன் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறி தெரிவதாகக் கூறுகின்றனர். அவர் கோமா நிலையிலும் ஏதோ ஒரு வகையில் இன்னும் உணர்வுடன் இருக்கிறார் என்றும் என்றாவது ஒருநாள் அவர் குணமடைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதுவரை அவருக்குத் தொடர்ந்து மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திகின்றனர்.
Sleeping prince photos
இளவரசர் அல்-வலீத் இருக்கும் மருத்துவமனை அறை மிகவும் அமைதியான இடமாக வைக்கப்பட்டுள்ளது. நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களும் அவரது குடும்பத்தினரும் 24 மணிநேரமும் தொடர்ந்து அவரைக் கவனித்துக்கொள்கிறார்கள். வேகமாக நகரும் உலகில், தூங்கும் இளவரசரின் 20 வருடத்துக்கும் மேலான வாழ்க்கைப் போராட்டம் நம்பிக்கையின் கீற்றாக உள்ளது.