நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சம்பளம் எவ்வளவு?
ரேடியேஷன், உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் என விண்வெளி வீரர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது. உயிர் பணயம் வைக்கும் விண்வெளி வாழ்க்கையில் சுனிதா வில்லியம்ஸிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

NASA astronauts Sunita Williams Salary : கலிபோர்னியா: எதிர்பாராத விதமாக நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, சக பயணி புட்ச் வில்மோருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதற்கு தயாராகி வருகிறார். முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியும், அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
NASA
இது நாசாவில் மிகவும் திறமையான விண்வெளி வீரர்களில் ஒருவராக சுனிதாவின் இடத்தை உறுதிப்படுத்துகிறது. இவ்வளவு சிறந்த கரியர் இருப்பதால், சுனிதா வில்லியம்ஸைப் பற்றி பலரும் ஆச்சரியப்படுவது ஒன்று இருக்கும். சுனிதா வில்லியம்ஸுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதுதான் அது. அமெரிக்க அரசாங்கத்தின் சம்பள அளவுகோல்களின்படி, நாசா விண்வெளி வீரர்களுக்கு அனுபவம் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் சம்பளம் வழங்குகிறது என்று கூறப்படுகிறது.
Sunita Williams
நாசாவின் கீழ் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு பொதுவாக GS 12 முதல் GS 15 வரையிலான கிரேடு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஜிஎஸ் 12 கிரேடு விண்வெளி வீரர்களின் அடிப்படை சம்பளம் சுமார் 66,167 டாலர்கள். இது தோராயமாக ஆண்டுக்கு 55 லட்சம் இந்திய ரூபாய் வரை இருக்கும். அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் GS 13 அல்லது GS 14 பிரிவில் அடங்குவர். அவர்களின் சம்பளம் சுமார் 90,000 டாலர் முதல் 140,000 டாலர் வரை இருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் முதல் 1.1 கோடி இந்திய ரூபாய் வரை.
Sunita Williams Salary
சுனிதா வில்லியம்ஸின் அனுபவம் மற்றும் பதவியைக் கருத்தில் கொண்டு, அவரது சம்பளம் GS 14 அல்லது GS 15 கிரேடுக்கு ஏற்ப இருக்கும் என்று கணிக்கலாம். அவரது ஆண்டு சம்பளம் சுமார் 152,258 டாலர் (அதாவது 1.26 கோடி ரூபாய்) என்று பல செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. சம்பளத்தைத் தவிர, நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு விரிவான சுகாதார காப்பீடு, மேம்பட்ட மிஷன் பயிற்சி, மனநல ஆதரவு, பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
Butch Wilmore
ஃபெடரல் மார்ஷலான கணவர் மைக்கேல் ஜே. வில்லியம்ஸுடன் டெக்சாஸின் ஹூஸ்டனில் வசிக்கும் சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மில்லியன் டாலர் என்று மார்க் டாட் காம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் நீண்ட காலம் செலவிட்டது, விண்வெளி ஆராய்ச்சியில் சுனிதாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
NASA astronauts Return to Earth
2024 ஜூன் 5 முதல் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கி வருகின்றனர். இருவரும் பயணம் செய்த போயிங் விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நிலையத்தில் தங்கும் காலம் 9 மாதங்களுக்கு மேல் நீடித்தது. சுனிதாவையும், புட்சையும் திரும்ப அழைத்து வருவதற்காக நாசா ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து ஏவிய க்ரூ டிராகன் காப்ஸ்யூல் ஐஎஸ்எஸ்-க்கு வந்துவிட்டது.
Salary for Sunita Williams
நாளை மார்ச் 19-ம் தேதி சுனிதாவும், புட்சும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இவர்களுடன் க்ரூ-9 பயணத்தின் மற்ற உறுப்பினர்களான நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸின் அலெக்சாண்டர் கோர்பனோவ் ஆகியோரும் டிராகன் ஓடத்தில் அன்று பூமிக்குத் திரும்புவார்கள்.