பிரதமர் மோடிக்கு தேசிய கொடியுடன் உச்சாக வரவேற்பு கொடுத்த இத்தாலி வாழ் இந்தியர்கள்! புகைப்பட தொகுப்பு!
ஜி-20, (G- 20 Summit )16 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இத்தாலி சென்றுள்ள பாரத பிரதமர் மோடிக்கு, ரோம் நகரில், அங்கு வாழும் இந்திய மக்கள் மூவர்ண கொடியுடன் உச்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இத்தாலியில் நாளை (அக்டோபர் 30) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 31) ஆகிய இரு தினங்கள் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதில் கலந்து கொள்வதற்காக.... பாரத பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்திய நேரப்படி இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு இத்தாலி தலைநகர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உச்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
குறிப்பாக இத்தாலியில் வாழும் இந்தியர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அதிகளவில் திரண்டு வந்து தேசிய கொடியுடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன். இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்திருந்தார்.
இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை கூட்டாக சந்தித்து பேசினார் பிரதமர். மேலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
உச்சிமாநாடு சந்திப்பில் கொரோனா பிரச்சனைக்கு பின் தற்போதைய உலகளாவிய நிலைமையை ஆய்வு செய்ய அனுமதிக்கும் மற்றும் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துவதற்கும், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.