MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சவுதி பாலைவனத்தில் விவசாயம் எப்படி நடக்குது தெரியுமா? வேற லெவல் சாட்டிலைட் போட்டோஸ்!

சவுதி பாலைவனத்தில் விவசாயம் எப்படி நடக்குது தெரியுமா? வேற லெவல் சாட்டிலைட் போட்டோஸ்!

சவுதி அரேபியாவின் வறண்ட பாலைவனத்தில் வண்ண வளையங்களை விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. இவை மத்திய-சுழல் நீர்ப்பாசன வயல்வெளிகள் ஆகும், இவை சவுதி அரேபியாவின் விவசாயத்திற்கு முக்கியமானவை.

2 Min read
Author : SG Balan
Published : Jul 21 2025, 09:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
பாலைவனத்தில் வண்ண வளையங்கள்
Image Credit : x/@esa

பாலைவனத்தில் வண்ண வளையங்கள்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் (European Space Agency) கோப்பர்நிக்கஸ் சென்டினல்-1 (Copernicus Sentinel-1) செயற்கைக்கோள் சமீபத்தில் எடுத்த ஒரு புதிய புகைப்படத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். வறண்ட பாலைவனத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் உள்ள பிரமாண்டமான வண்ண வளையங்கள், வடக்கு சவுதி அரேபியாவில் விவசாயம் எப்படி நடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அக்டோபர் 2024 (நீலம்), ஜனவரி 2025 (பச்சை) மற்றும் மே 2025 (சிவப்பு) ஆகிய மூன்று வெவ்வேறு மாதங்களில் ரேடார் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்பட்ட இந்த படங்கள், காலப்போக்கில் நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த கவர்ச்சியான வண்ணமயமான வளையங்கள், உண்மையில் வாடி அஸ் சிருஹான் (Wadi As Sirhan) படுகையில் அமைந்துள்ள தபார்ஜல் (Tabarjal) நகருக்கு அருகில் உள்ள மத்திய-சுழல் நீர்ப்பாசன (central-pivot irrigation) வயல்வெளிகள் ஆகும். ஒவ்வொரு வட்ட வடிவ பண்ணையும் சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது. நீண்ட சுழலும் தெளிப்பான்கள் கிணற்றைச் சுற்றி வந்து, சீராக நீர்ப்பாசனம் செய்யும். இதனால் சரியான வட்ட வடிவில் சாகுபடி நிலங்களை உருவாக்குகின்றன.

சவுதி அரேபியாவின் வறண்ட காலநிலைக்கு இந்த அமைப்பு மிகவும் முக்கியமானது. இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளதுடன், பெரும்பாலான நிலங்கள் நீர்நிலைகள் இல்லாத வறண்ட பாலைவனமாகவே உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
சவுதி அரேபியாவில் விவசாய நிலங்கள்
Image Credit : x/@esa

சவுதி அரேபியாவில் விவசாய நிலங்கள்

சென்டினல்-1 செயற்கைக்கோள் வழக்கமான புகைப்படங்களுக்குப் பதிலாக ரேடாரைப் பயன்படுத்தி, தொடர்ச்சியான படங்களை எடுக்க உதவுகிறது. இது விஞ்ஞானிகள் எல்லா பருவங்களிலும் விவசாய நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகிறது. படத்தில் உள்ள பல வண்ணங்கள் பயிர்களின் இருப்பு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சி நிலைகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் பருவகால மாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது.

கடுமையான காலநிலை இருந்தபோதிலும், கோதுமை, காய்கறிகள் போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. கவனமான நீர் மேலாண்மை உத்திகளால் இது சாத்தியமாகிறது.

படத்தின் சுற்றியுள்ள பகுதிகள், வெள்ளை, சாம்பல் அல்லது கருப்பு நிறங்களில் காட்டப்பட்டுள்ளன. அவை வெறும் நிலம், பாலைவன மணல் அல்லது தாவரங்கள் இல்லாத வயல்வெளிகளைக் குறிக்கின்றன. தபார்ஜல் நகர்புறம் மேல் வலதுபுறத்தில் ஒரு வெள்ளை புள்ளியாகத் தெரிகிறது. இந்த நகரம் ஒரு முக்கிய விவசாய மையமாக செயல்படுகிறது. வடக்கு சவுதி அரேபியாவின் உணவு விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
விண்வெளி
விவசாயம்
உலகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image2
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Recommended image3
Vietjet 11 Flight Offer: ரூ.11-ல் விமான டிக்கெட்! மாலத்தீவுக்கு புதிய வழித்தடம் தொடங்கும் தேதி அறிவிப்பு
Related Stories
Recommended image1
விவசாயிகளுக்கு புது வாழ்வு! காலநிலைப் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு!
Recommended image2
பேரண்டத்தின் பரப்பளவு: மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி மர்மம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved