MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சந்திரகலாவை லெப்ட்-ரைட் வாங்கிய சாமுண்டீஸ்வரி! ஆதாரத்துடன் சிக்கிய வில்லி - இனி கலாவுக்கு இந்த வீட்டில் இடமில்லையா?

சந்திரகலாவை லெப்ட்-ரைட் வாங்கிய சாமுண்டீஸ்வரி! ஆதாரத்துடன் சிக்கிய வில்லி - இனி கலாவுக்கு இந்த வீட்டில் இடமில்லையா?

Karthigai Deepam Serial Today Episode Review : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1149ஆவது எபிசோடில் தனது அக்கா சாமுண்டீஸ்வரியிடம் சந்திரகலா வசமாக சிக்கியதோடு மட்டுமின்றி போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 12 2026, 10:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthigai Deepam Serial Today Episode Review, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் விமர்சனம்
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode Review, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் விமர்சனம்

கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா தான் உண்மையான திருடி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது எப்படி நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோயில் நகையை யார் திருடியது என்ற உண்மையை கண்டுபிடித்தால் மட்டுமே கார்த்திக்கை தனது வீட்டிற்குள் விடுவேன் என்று சாமுண்டீஸ்வரி கூறினார். தனது வீட்டில் கணவருக்கு இடமில்லாத போது அவர் உண்மையை கண்டுபிடிக்கும் வரையில் தானும் வீட்டிற்குள் போக மாட்டேன் என்று ரேவதி வீட்டிற்கு வெளியிலேயே இருந்தார்.

25
Chamundeshwari scolds Chandrakala with evidence , சந்திரகலாவை விளாசிய சாமுண்டீஸ்வரி
Image Credit : Zee Tamil You Tube

Chamundeshwari scolds Chandrakala with evidence , சந்திரகலாவை விளாசிய சாமுண்டீஸ்வரி

கார்த்திக்கும் உண்மையை கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்கினார். அவருக்கு பக்கபலமாக மயில்வாகனம் இருந்தார். முதலில் நகையை மறைத்து வைத்த சண்முகத்தின் மனைவி மூலமாக கார்த்திக் தனது டிராமாவை அரங்கேற்றினார். இதற்கு 100 சவரன் போலி நகைகளை கொடுத்திருந்தார். அதை வாங்க வந்த சந்திரகலா அந்த நகைகளை தன்னிடம் தரவில்லை என்றால் போலீசிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.

35
Karthik Raj and Reshma Pasupuleti face-off, கார்த்திக் மற்றும் ரேஷ்மா மோதல்
Image Credit : Zee Tamil You Tube

Karthik Raj and Reshma Pasupuleti face-off, கார்த்திக் மற்றும் ரேஷ்மா மோதல்

வேறு வழியில்லாமல் சண்முக பாண்டியனின் மனைவி அந்த நகைகளை கொடுத்தார். ஆனால் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக செலவுக்கு கடனாக வாங்கிய பணத்தை சிவனாண்டி இதுவரையில் திரும்ப செலுத்தவில்லை. இதன் காரணமாக சிவனாண்டிக்கு பணம் கொடுத்தவர் அவரை தேடி வந்து கொடுத்த காசு, பணத்தை வட்டியோடு கேட்டார். மேலும், ஒரு நாள் அவகாசம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

45
Chandrakala caught in jewelry theft case, நகை திருட்டு வழக்கில் சிக்கிய சந்திரகலா
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala caught in jewelry theft case, நகை திருட்டு வழக்கில் சிக்கிய சந்திரகலா

இதற்காக சிவனாண்டி தனது மனைவிக்கு போன் போட்டு பாதி நகையை கேட்க, அவரும் கொடுத்தார். இதை தொடர்ந்து அந்த நகைகளை சேட்டிடம் கொடுத்து பணம் பெற்றார். மேலும், சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் பேசும் வீடியோ, சண்முக பாண்டியன் மனைவியிடம் பேசும் வீடியோவை ஆதாரமாக எடுத்து கொண்டனர்.

55
Chamundeshwari's angry reaction on Chandrakala, சந்திரகலா மீது சாமுண்டீஸ்வரி கோபம்
Image Credit : Zee Tamil Serial

Chamundeshwari's angry reaction on Chandrakala, சந்திரகலா மீது சாமுண்டீஸ்வரி கோபம்

இந்த நிலையில் தான் எடுத்த வீடியோ ஆதாரமாக சாமுண்டீஸ்வரிடம் கார்த்திக் காட்டினார். மேலும், போலி நகையில் சந்திரகலாவின் கை ரேகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போன்று சிவனாண்டியிடம் பேசும் வீடியோவையும் மயில்வாகனம் வெளியிடவே அப்போது சந்திரகலா டிராமா ஆடினார். ஆனால், உண்மையை தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். மேலும், போலீசை வர சொல்லி அவர்களிடம் பிடித்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சந்திரகலாவிற்கு எதிரான புகார் கொடுத்த கார்த்திக் அவரிடம் பேசினார். ஆனால், அவரோ எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் திருந்தாமல் கார்த்திக்கை பழி வாங்கி தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
பாட்டியின் பிளானை கேட்டு அரண்டுபோன அரசி... கடும் அப்செட்டில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
பூஜையால் வெடிக்கப்போகும் பூகம்பம்... குணசேகரன் நல்லவர் வேஷம் போட்டது இதுக்குத்தானா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
விஜயா மூடிமறைத்த உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை... பெண் வீட்டார் கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved