5.5G சேவை வந்தாச்சு! அசத்தும் ஜியோ; மின்னல் வேக இன்டர்நெட்; நொடிகளில் படங்கள் டவுன்லோடாகும்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5.5G நெட்வொர்க் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 5.5ஜி சேவை என்றால் என்ன? இதற்கும் 5ஜிக்கும் என்ன வேறுபாடு? என்பது குறித்து பார்க்கலாம்.
5.5G Internet Service
5.5ஜி சேவை
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அதிலும் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜியை தாண்டி 5ஜி சேவையையும் அறிமுகம் செய்து விட்டன. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதிலும் ஒருபடியை தாண்டி 5.5ஜி நெட்வொர்க்கை அறிமும செய்துள்ளது. இந்த 5.5ஜி நெட்வொர்க் 10Gbps வரை அதிவேக இணைய வேகத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட இணைப்பு மற்றும் சிறந்த நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது.
JIO launched 5.5G network
5.5ஜி நெட்வொர்க் என்றால் என்ன?
ஜியோவின் 5G சேவையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 5.5G நெட்வொர்க் ஆகும். வழக்கமான 5ஜி உடன் ஒப்பிடும்போது, இது வேகமான இணைய வேகத்தையும், மேம்பட்ட நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இந்த அமைப்பு மூன்று தனித்துவமான நெட்வொர்க் செல்களைப் பயன்படுத்துகிறது. அவை ஒரே நேரத்தில் பல டவர்களுடன் இணைக்க முடியும். எனவே வாடிக்கையாளர்கள் 1Gbps மற்றும் 10Gbps வரையிலான இணைய வேகத்தில் வீடியோக்கள், திரைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியும்.
இனி லேப்டாப் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி; பிளிங்கிட் சூப்பர் அறிவிப்பு!
What Is The 5.5G Service
5G நெட்வொர்க்கிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?
5.5ஜி சேவை டவர்கள் உள்பட பல்வேறு நெட்வொர்க் செல்களுக்கு ஒரே நேரத்தில் ஏராளமான இணைப்புகளை அனுமதிக்கிறது. இது வழக்கமான 5ஜி சேவையை விட நெட்வொர்க்கை மிகவும் வேகமாக பயன்படுத்த வழிவகுக்கிறது. இது சாதனங்களை ஒரே நேரத்தில் ஒரு டவருடன் இணைக்க அனுமதிக்கிறது. இதன் விளைவாக தரவு பரிமாற்ற விகிதங்கள் மற்றும் பொதுவான மொபைல் செயல்திறன் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
OnePlus 13 சீரிஸ் போனில் 5.5ஜி நெட்வொர்க்
ஜியோவுடன் கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5.5ஜி நெட்வொர்க் சேவைகளை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஜியோவின் அதிநவீன நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் செயல்பட வடிவமைக்கப்பட்டதால் 5.5ஜி சேவைக்கு சப்போர்ட் செய்கிறது.
JIO Recharge Plan
5.5G நெட்வொர்க்கின் நன்மைகள் என்ன?
ஜியோவின் 5.5G நெட்வொர்க் சேவை வாடிக்கையாளர்களுக்கு பல குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். 5.5ஜி யின் வேகம் ஆன்லைன் கேமிங்கிலிருந்து HD வீடியோ ஸ்ட்ரீமிங் முதல் பெரிய வீடியோக்களை டவுன்லோட் செய்வது வரை அனைத்தையும் மேம்படுத்தும்.
1. வேகமான அப்டேட்டுகள் மற்றும் டவுன்லோட்கள்: 5.5ஜி சேவையின் மூலம் பெரிய ஆப்ஸ்களையும் விரைவில் அப்டேட்டுகள் செய்வதுமட்டுமின்றி, வேகமாக டவுன்லோடும் செய்ய முடியும்.
பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்கள்; ரூ.200 கூட இல்ல; தினமும் 2ஜிபி டேட்டா; அன்லிமிடெட் கால்ஸ்!
2. ஸ்பீடு கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங்: எந்தவித தடங்களுமின்றி ஆன்லைன் கேம்களை விளையாடலாம். 4K மீடியா வீடியோவையும் தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
3. ரிமோட் ஏரியாவிலும் ஸ்பீடு நெட்வோர்க்: அதிகம் டவர்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளிலும், பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும்போதும், தடையில்லாத இன்டர்நெட் சேவையை பெறுவதன்மூலம் வீடியோ கால்க சேவையை தடையின்றி பெற முடியும். மேலும் சிறந்த வீடியோ ஸ்டிரீமிங் அனுபவத்தை பெறலாம்.