வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்டை திரும்பப் பெறுவது எப்படி?
தற்செயலாக அல்லது புதிய மொபைலுக்கு மாறும்போது வாட்ஸ்அப் உரையாடல்கள் எல்லாம் அழிந்துவிட்டதா? கவலைப்படத் தேவையில்லை. அவற்றை மீட்டெடுக்க வழி இருக்கிறது. பேக்அப் செட்டிங்கை பொறுத்து பல வழிகளில் வாட்ஸ்அப் சாட்களை திரும்பப் பெறலாம்.
WhatsApp Tips and Tricks
தற்செயலாக அல்லது புதிய மொபைலுக்கு மாறும்போது வாட்ஸ்அப் உரையாடல்கள் எல்லாம் அழிந்துவிட்டதா? கவலைப்படத் தேவையில்லை. அவற்றை மீட்டெடுக்க வழி இருக்கிறது. பேக்அப் செட்டிங்கை பொறுத்து பல வழிகளில் வாட்ஸ்அப் சாட்களை திரும்பப் பெறலாம்.
WhatsApp Cloud Backup
கூகுள் டிரைவ் (Google Drive) மற்றும் iCloud இல் பேக்அப் செய்திருந்தால் அதன் மூலம் சாட்டை திரும்பப் பெறலாம். ஆன்டிராய்டு பயனர்கள் மொபைல் ஸ்டோரேஜில் உள்ள லோக்கல் பேக்அப் மூலம் திரும்பப் பெறும் வழியும் உள்ளது. மேலும், வேறு சில கருவிகள் மூலமும் இழந்த சாட்டை மீட்டெடுக்கலாம்.
WhatsApp Backup
நீக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடலை மீட்பது பேக்அப் செட்டிங் மற்றும் பயன்படுத்தப்படும் சாதனத்தைப் பொறுத்தது. ஆண்டிராய்டு மற்றும் iOS இரண்டிலும் வெவ்வேறு வழிமுறையைப் பின்பற்றி சாட்டை மீட்கலாம்.
Recover WhatsApp Chat in Android
ஆண்ட்ராய்டு மொபைல் பயன்ரகள் Settings > Chats > Chat Backup என்ற பகுதிக்குச் சென்று பேக்அப் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். பின்பு வாட்ஸ்அப்பை Uninstall செய்யவும். மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்த்து, உள்ளே நுழையுவும். அப்போது பேக்அப் மூலம் வாட்ச்அப் மூலம் வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்கும் ஆப்ஷனை தேர்வுசெய்யவும்.
WhatsApp Chat Recovery in iOS
ஐபோன் (iOS) பயனர்களும் முதலில் Settings > Chats > Chat Backup என்ற பகுதிக்குச் சென்று பேக்அப் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். பிறகு, வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுக்கவும்.
WhatsApp Recovery from Internal Storage
ஆண்டிராய்டு பயனர்கள் மட்டும் இன்டர்னல் மெமரியில் உள்ள பேக்அப் கோப்பை பயன்படுத்தி மீட்டெடுக்கலாம். இதற்கு ஃபைல் மேனேஜர் செயலியைத் திறந்து அதில், WhatsApp > Databases என்ற ஃபோல்டருக்குச் செல்லவும். அதில் msgstore.db.crypt12 என்ற கோப்பைக் கண்டுபிடிக்கவும். பேக்அப் கோப்பு வேறு பெயரில் இருந்தால், அந்தக் கோப்பின் பெயரை msgstore.db.crypt12 என மாற்றவும். பிறகு வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து பேக்அப் ஆப்ஷனைத் தேர்வுசெய்யவும்.