இன்டர்நெட் ஸ்லோவா இருக்கா? சூப்பர் ஸ்பீடு டேட்டாவுக்கு இதை ட்ரை பண்ணுங்க!
Tips for mobile internet speed: உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு மிகவும் மெதுவாக இருக்கிறதா? மொபைல் டேட்டா சிக்கல் இருந்தால், அதை சரிசெய்ய சில டிப்ஸ். சீராக ஹை-ஸ்பீடு இணைய வசதியை பயன்படுத்த இதை முயற்சி செய்யுங்கள்.
Restart Your Phone
உங்கள் மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்யுங்கள்: உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் (Restart) செய்வது இன்டர்நெட் இணைப்பில் உள்ள சிக்கல்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்கும். இதன் மூலம் ஏதேனும் தற்காலிக குறைபாடுகள் இருந்தால் அவை நீக்கப்பட்டு, நெட்வொர்க் இணைப்பைப் புதுப்பிக்கப்படும். மொபைலை ரீஸ்டார்ட்செய்ய விரும்பவில்லை என்றால், Flight Mode ஐ சில நிமிடங்கள் பயன்படுத்தவும்.
Update Your Phone and Apps
மொபைல் அப்ளிகேஷன்களை அப்டேட் செய்யவும்: உங்கள் மொபைலில் மென்பொருளைப் புதுப்பிக்காதது நெட்வொர்க் ஸ்பீடு சிக்கல்கள் உட்பட பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் மொபைலின் ஓ.எஸ். அப்டேட் இருந்தால் தவறாமல் அதை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். செல்போனில் இன்ஸ்டால் செய்துள்ள செயலிகளையும் அப்டேட் செய்ய வேண்டும்.
Clear App Cache
தற்காலிக மெமரியை அழிக்கவும்: கம்ப்யூட்டர்களைப் போலவே, போன்களிலும் தற்காலிக தரவுகள் இருக்கும். அவை காலப்போக்கில் குவிந்து, உங்கள் இணைய வேகத்தைக் குறைக்கும். இன்டர்நெட் பிரவுசர் மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் பிற செயலிகளில் தற்காலிக மெமரியை அழிப்பது செயல்திறனை மேம்படுத்த உதவும். இன்டர்நெட் பிரச்சினையை சரிசெய்யவும் இது பயன்படும்.
Background Data Usage
பின்னணி செயல்பாட்டை சரிபார்க்கவும்: பல செயலிகள் பின்னணியில் இன்டர்நெட் டேட்டாவை பயன்படுத்தும்போது நெட்வொர்க் வேகத்தை குறைக்கலாம். குறிப்பிட்ட ஆப் வழக்கத்தை விட அதிக டேட்டாவைப் பயன்படுத்தினால், அவை பின்னணியில் இன்டர்நெட்டை பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
Reset Network Settings
நெட்வொர்க் செட்டிங்ஸ்: தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டால், உங்கள் நெட்வொர்க் செட்டிங்ஸ் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ரீசெட் (Reset) செய்யுங்கள். இது அடிக்கடி ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உதவும். ஆனால், நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்யும்போது சேமித்து வைத்த வைஃபை நெட்வொர்க் மற்றும் புளூடூத் இணைப்புகளும் அகற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.