MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெக் டிப்ஸ்
  • ஐஆர்சிடிசி முதல் ஐ.டி. ரிட்டன் வரை... புதுப்புது ரூட்டில் களமிறங்கும் சைபர் கிரைம் மோசடி!

ஐஆர்சிடிசி முதல் ஐ.டி. ரிட்டன் வரை... புதுப்புது ரூட்டில் களமிறங்கும் சைபர் கிரைம் மோசடி!

டிஜிட்டல் மோசடி அதிகரித்து வரும் சூழலில், சைபர் கிரைமினல்கள் தங்கள் தந்திரங்களைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற பல்வேறு வழிகளில் வருவது பற்றி க்விக் ஹீல் எடுத்துரைக்கிறது.

2 Min read
SG Balan
Published : Oct 07 2024, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Online Scams report by Quick Heal

Online Scams report by Quick Heal

டிஜிட்டல் மோசடி அதிகரித்து வரும் சூழலில், உலகளாவிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்விக் ஹீல் டெக்னாலஜீஸ் தற்போது தொழில்நுட்பப் பயனர்களை அச்சுறுத்தும் அதிநவீன சைபர் மோசடிகள் பற்றிய விவரிக்கும் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளது. சைபர் கிரைமினல்கள் தங்கள் தந்திரங்களைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற பல்வேறு வழிகளில் வருவது பற்றி க்விக் ஹீல் எடுத்துரைக்கிறது.

28
Malicious APK

Malicious APK

தீங்கிழைக்கும் APK கோப்புகளைப் பயனர்கள் பதிவிறக்க வைத்து, அதன் மூலம் ஏமாற்றுவதற்கு சைபர் குற்றவாளிகள் வலை வீசுகிறார்கள். இந்த மோசடிகள் பெரும்பாலும் "இன்று மட்டும் சலுகை" அல்லது "இன்றே கடைசி நாள்!" போன்ற அவசர உணர்வைத் தூண்டும் வாசகங்களைக் கொண்டிருக்கும். "பல டாலர்கள் மதிப்புள்ள பரிசை அனுபவிக்க இப்போதே பதிவு செய்யுங்கள்" என்று கவர்ச்சிகரமான வெகுமதிகளை வழங்குவதாகவும் கூறியிருப்பார்கள். அல்லது "உங்கள் கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்டிவேட் செய்ய KYC அப்டேட் செய்ய வேண்டும்" என்பது போன்ற செய்திகளை அனுப்புவார்கள்.

38
Cybercrime

Cybercrime

இதுபோன்ற மெசேஜ்களில் வரும் இணைப்புகளை கிளிக் செய்வது பண இழப்பு, தனிப்பட்ட தரவு திருட்டு மற்றும் திருட்டுத்தனமான வங்கிப் பரிவர்த்தனைகள் போன்ற மோசடிகளுக்கு வழிவகுக்கும். குறிப்பிட்ட சாதனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சுரண்டிலில் ஈடுபடவும் முயற்சி செய்வார்கள்.

48
Fake Websites

Fake Websites

தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகள் நெருங்கி வருவதால், ஷாப்பிங் செய்பவர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என க்விக் ஹீல் கண்டறிந்துள்ளது. "shoop.xyz", "shop.com" போன்ற போல பிரபல ஷாப்பிங் இணையதளங்கள் போன்ற போலி டொமைன்களை உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

58
Diwali gift

Diwali gift

சைபர் கிரைமினல்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளை வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி, சிறப்பு பரிசுகள் காத்திருப்பதாக லிங்க்கை கிளிக் செய்ய  வற்புறுத்துகிறார்கள். பெரும்பாலும் இந்தத் தீங்கிழைக்கும் இணைப்புகள் சுருக்கப்பட்ட URL களாக இருக்கும்.

மோசடி செய்பவர்கள் தவறான அவசர உணர்வை உருவாக்கி, டிஜிட்டல் பயனர்கள் தங்கள் "சிறப்பு தீபாவளிப் பரிசு" தொடர்பான செய்தியை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளத் தூண்டுகிறார்கள்.

68
E-commerce

E-commerce

மோசடி செய்பவர்கள் ஈ-காமர்ஸ் வாடிக்கையாளர்களை குறிவைத்து, பரிசு வென்றிருப்பதாகக் கூறி போலி செய்திகளை அனுப்புகின்றனர். "அன்புள்ள வாடிக்கையாளரே! நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்..." என்பது போன்ற செய்திகளை இந்த மோசடிக்காரர்கள் SMS, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடக தளங்கள் மூலம் அனுப்பி தனிப்பட்ட தகவல்களைத் திருட முயல்கிறார்கள்.

78
QR code

QR code

தீங்கிழைக்கும் QR குறியீடுகளை அனுப்பியும் முறைகேடுகள் நடக்கின்றன. QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும்போது, ​​எந்தப் பிரச்சினையும் இல்லாதது போலத் தோன்றும். ஆனால் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் போலி இணையதளங்களில் நுழையக்கூடிய லிங்க் அதில் இருக்கலாம். சில சமயங்களில், இந்த QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனரின் டிஜிட்டல் சாதனத்தில் மால்வேர்களை நிறுவும் வாய்ப்பும் உண்டு.

88
Income tax fraud

Income tax fraud

வருமான வரித்துறை பெயரில் புதிய மோசடி நடைபெறுகிறது. வரியைத் திரும்பப் பெறலாம் எனக் கூறி தொடர்புகொள்வார்கள். பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்துவார்கள். அடிக்கடி "உங்கள் வருமான வரி ரீபண்ட் அங்கீகரிக்கப்பட்டது. உங்கள் கணக்கு எண்ணைச் சரிபார்க்கவும்" என்று எஸ்.எம்.எஸ் அல்லது ஈமெயில்  அனுப்புவார்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சைபர் பாதுகாப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved