மொபைல் தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! ஈசியா கண்டுபிடிக்கலாம்!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் காணாமல் போனால், அதில் உள்ள தரவுகளைப் பாதுகாக்கவும் பத்திரமாகத் தேடிக் கண்டுபிடிக்கவும் எளிமையான தொழில்நுட்ப வழி உள்ளது.
How to find Lost Android Mobile
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் அன்றாட நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள் என தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய மொபைல் தொலைந்தால் ஏற்படும் இழப்புகள் அதிகம். நிதி இழப்பு, தனிப்பட்டத் தகவல் திருட்டு ஆகிய ஆபத்துகளுக்கும் வாய்ப்பு உண்டு.
Find My Device
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் காணாமல் போனால், அதில் உள்ள தரவுகளைப் பாதுகாக்கவும் பத்திரமாகத் தேடிக் கண்டுபிடிக்கவும் எளிமையான தொழில்நுட்ப வழி உள்ளது.
Find my device options
தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்டுபிடிக்க கூகுளின் Find My Device என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். வேறு ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தில் பிளே ஸ்டாரில் இருந்து Find My Device செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இதற்கு மாற்றாக, பிரவுசர் வழியாக google.com/android/find என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று கூகுள் கணக்கில் லாக்இன் செய்ய வேண்டும்.
Track the lost mobile
லாக்-இன் செய்த கூகுள் கணக்கு எந்தெந்த சாதனங்களில் பயன்பாட்டில் உள்ளது என்ற பட்டியல் கிடைக்கும். அதில் காணாமல்போன செல்போனைத் தேர்ந்தெடுத்து, இப்போது அது இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கான வழிகாட்டலைப் பெற வேண்டும். கூகுள் மேப் மூலம் தொலைந்த செல்போன் இருக்கும் இடத்திற்குச் செல்லலாம்.
Lock the device Remotely
காணாமல்போன போனை ரிங் செய்ய வைக்கும் ஆப்ஷனும் இருக்கும். போன் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றாலும் அது கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கலாம். அப்போது மொபைலைக் கண்டுபிடிக்க இந்த ஒலி எழுப்பும் வசதி உதவியாக இருக்கும். போனை கண்டெடுப்பதற்கு முன்பே, அதில் உள்ள தரவைப் பாதுகாக்க தொலைவிருந்தே லாக் செய்யும் வசதியும் உள்ளது.
Factory Reset
தேவைப்பட்டால், மொபைலில் உள்ள எல்லா தரவையும் அழிக்க ஃபேக்ட்ரி ரீசெட் (Factory Reset) ஆப்ஷனையும் தொலைவில் இருந்தே செயல்படுத்தலாம். ஆனால், ஃபேக்ட்ரி ரீசெட் செய்த பிறகு, தொலைந்த செல்போனை டிராக் செய்து கண்காணிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
eSIM advantage
Find My Device வசதி சரியாகச் செயல்பட தொலைந்துபோன மொபைல் இன்டர்நெட் இணைப்புடன் இருக்க வேண்டும். eSIM பொருத்தப்பட்ட ஃபோன்களில் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் கனெக்ட் செய்ய முடியும். ஆனால், தொலைந்த போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து ஆஃப் ஆகிவிட்டால் இந்த வசதியை பயன்படுத்த முடியாது.
Recovering lost android smartphone
இந்த வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் காணாமல் போன அல்லது களவாடப்பட்ட ஆண்ட்ராய்டு செல்போனை தேடிக் கண்டுபிடிக்கலாம். அதில் உள்ள தகவல்களையும் பாதுகாக்கலாம். மொபைலை திரும்பப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.