மொபைல் இன்டர்நெட் ஸ்லோவா இருக்கா? ஹை ஸ்பீடு டேட்டாவுக்கு இதை ட்ரை பண்ணுங்க!
இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் 2G, 3G எல்லாம் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் 5MB ஃபைலை டவுன்லோட் செய்வதுகூட கடினமாக இருந்தது. இப்போது 4G இன்டர்நெட் பயன்பாடு சேவை பரவலாகிவிட்டது. ஆனால் இன்னும் சிலருக்கு இன்டர்நெட் ஸ்பீட் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதை சரிசெய்ய சில யோசனைகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Clear your Cache
கேச் கிளியர் செய்வது மெதுவாக இருக்கும் மொபைல் இன்டர்நெட் வேகத்தை சரிசெய்ய உதவும். நீண்ட காலமாக உங்கள் மொபைலில் கேச் கிளியர் செய்யவில்லை என்றால் நிச்சயமாக அதை அழித்துப் பாருங்கள். உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கும்.
Close your apps
ஸ்மார்ட்ஃபோன்கள் பின்னணியில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைக் கொண்டிருக்கலாம். பல செயலிகள் பின்னணியில் இயங்கிக்கொண்டிருப்பது மொபைல் இன்டர்நெட் வேகத்தைப் பாதிக்கும். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை க்ளோஸ் செய்யலாம் அல்லது அழித்துவிடலாம்.
Turn off auto update for your apps
மொபைல் அப்ளிகேஷன்களை ஆட்டோ அப்டேட் செய்யும் ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்கலாம். அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளை அவ்வப்போது நாமே பார்த்து அப்டேட் செய்துகொள்ளலாம். ஏனென்றால், ஆட்டோ அப்டேட் செய்வதற்காக மொபைல் டேட்டா செலவாகும்போது இன்டர்நெட் வேகம் குறையும்.
Use a different browser/lite apps
நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரை மாற்றலாம். லைட் வெர்ஷனாகக் கிடைக்கும் பிரவுசர் பயன்படுத்தினால் மொபைல் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கலாம். இன்று பல பிரபல அப்ளிகேஷன்கள் பலவும் லைட் வெர்ஷனை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை பயன்படுத்திப் பார்க்கலாம்.
Reset your network setting
மொபைல் நெட்வொர்க் செட்டிங் இயல்பாக தானாகவே இயங்கக்கூடியதாக இருக்கும். இது அடிக்கடி சிக்கல்களை உருவாக்கி இணைய வேகத்தை மெதுவாக்கலாம். இதை சரிசெய்ய உங்கள் மொபைலில் நெட்வொர்க் செட்டிங்ஸை ரீசெட் செய்து பார்க்கலாம்.