உங்கள் போன் சார்ஜர் ஒரிஜினலா போலியா? கண்டுபிடிக்க முதல்ல இதை செக் பண்ணுங்க!
குறைந்த விலையில் டூப்ளிகேட் சார்ஜரை வாங்கி சில நாட்களில் குப்பைத் தொட்டியில் போடுவதை விட, சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஒரிஜினல் சார்ஜரை வாங்குவது நல்லது.
Charger
சிலருக்கு மொபைலுடன் கிடைக்கும் சார்ஜரில் சிக்கல் ஏற்படக்கூடும். சில நேரங்களில் மக்கள் வீட்டில் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் ஒரே ஒரு சார்ஜரையே பயன்படுத்துகின்றனர். இதனால் சார்ஜர் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. அப்போது கடையில் வாங்கும் சார்ஜர் ஒரிஜினல் தானா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
mobile phone charger
மொபைல் நிறுவனத்தின் பிராண்ட்டட் சார்ஜர்கள் விலை உயர்ந்தவையாக இருப்பதால் பலர் குறைந்த விலையில் சார்ஜர்களை வாங்குகின்றனர். ஆனால் அந்த சார்ஜர்களால் ஸ்மார்ட்போன் சேதமடையும் அபாயம் உள்ளது. சந்தையிலும் டூப்ளிகேட் சார்ஜர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Charger tips
சார்ஜரின் பின்புறத்தில் இரட்டை சதுர சின்னம் இருந்தால், மொபைல் சார்ஜரின் உள்ளே பயன்படுத்தப்படும் வயரிங் இரட்டை இன்சுலேட்டட் என்று அர்த்தம். இந்த சார்ஜரில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பு குறைவு. எனவே இந்த சார்ஜரை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சார்ஜரில் V என்ற எழுத்து இருந்தால், அது சார்ஜரின் திறனைக் குறிக்கிறது. சார்ஜர்களின் திறனைப் பொறுத்து இது மாறுபடும். சில சார்ஜர்களில் கிராஸ் டஸ்ட் பின் படத்தைப் பார்க்கலாம். அதாவது இந்த சார்ஜர் பழுதடைந்தால் குப்பையில் வீசக்கூடாது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்று பொருள்.
Duplicate Charger
சார்ஜரில் வீடு போன்ற குறியீடு இருந்தால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த சார்ஜரை உயர் மின்னழுத்த பகுதிகளில் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் போனுக்கு சேதம் ஏற்படலாம்.
Original Charger
சார்ஜர்களில் 8 போன்ற அடையாளம் இருப்பதைப் பார்க்க முடியும். இந்த சார்ஜர்கள் அனைத்து பாதுகாப்பு தரநிலைகளையும் பூர்த்தி செய்திருக்கும். இந்த சார்ஜர் சிறந்த செயல்திறன் கொண்டவையாக இருக்கும்.
Branded Charger
போலி சார்ஜர்கள் பெரும்பாலும் அசல் சார்ஜரை விட சற்று வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். எனவே, சார்ஜரை வாங்கும்போது, போனின் ஒரிஜினல் சார்ஜர் வடிவமைப்பை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். வடிவமைப்பில் வித்தியாசம் இருந்தால் அது போலி சார்ஜராக இருக்கலாம்.
Charger safety
சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் அசல் சார்ஜர்களை கவனமாகப் பார்த்தால், ஹோல்டரின் வடிவமைப்பு, அதில் உள்ள குறியீடுகள், எழுத்துரு போன்றவை எப்படி தனித்துவமாக இருப்பதைப் பார்க்கலாம். புதிதாக வாங்கும் சார்ஜரில் இவை அனைத்தும் ஒத்துப்போகிறதா என்று தவறாமல் சரிபார்க்கவும்.
Charging tips
குறைந்த விலையில் டூப்ளிகேட் சார்ஜரை வாங்கி சில நாட்களில் குப்பைத் தொட்டியில் போடுவதை விட, சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஒரிஜினல் சார்ஜரை வாங்குவது நல்லது. எனவே சார்ஜர் வாங்குவதில் கவனமாக இருந்தால் பின்னால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.