டெலிட் செய்த வாட்ஸ்அப் உரையாடலை மீட்டெடுப்பது எப்படி?
WhatsApp Tips: நீக்கப்பட்ட வாட்ஸ்அப் உரைடாயல்களை மீட்டெடுப்பது எப்படி? கிளவுட் அல்லது லோக்கல் பேக்அப்பை பயன்படுத்தி டெலிட் செய்த சாட்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
WhatsApp Tips and Tricks
மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி அலுவலக வேலை முதல் தனிப்பட்ட உரையாடல்கள் வரை தினசரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் எல்லாம் அழிக்கப்பட்டால், அதனால் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, நீக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
WhatsApp Latest Update
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் பேக்அப் எடுக்க கூடுதல் வசதி உள்ளது. உண்மையில், ஆண்டிராய்டு மொபைல்களில் வாட்ஸ்அப் தொடர்ந்து லோக்கல் பேக்அப்களை உருவாக்குகிறது. எனவே, தற்செயலாக நீக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்டெடுக்க, போன் மெமரியில் உள்ள பேக்அப்பை பயன்படுத்தலாம்.
WhatsApp updates
ஃபைல் மேனேஜரைத் திறந்து / WhatsApp/Databases என்ற ஃபோல்டருக்குச் செல்லவும்.
msgstore-YYYY-MM-DD.1.db.crypt14 என்ற பேக்அப் கோப்பை msgstore.db.crypt14 என பெயர் மாற்றம் செய்யவும். இதில் YYYY-MM-DD என்பது சமீபத்திய பேக்அப் எடுக்கப்பட்ட தேதியைக் குறிக்கிறது. வாட்ஸ்அப்பை Uninstall செய்து, மீண்டும் நிறுவி, ‘Restore’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
WhatsApp Deleted Message
அடுத்து கூகுள் டிரைவில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுப்பது எப்படி என்று பார்க்கலாம். பெரும்பாலான வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் பேக்அப் எடுப்பதற்கான ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கிறார்கள். கூகுள் டிரைவ் பேக்அப் கோப்பை பயன்படுத்த, அதே மொபைல் எண்ணையும் கூகுள் கணக்கையும் பயன்படுத்துவது முக்கியம்.
WhatsApp Chats
அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடலை மீட்டமைக்க, முதலில் வாட்ஸ்அப்பை Uninstall செய்து பின்னர் மீண்டும் இன்ஸ்டால் செய்யவும். செயலியைத் திறந்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணைக் கொண்டு Login செய்யவும். சரிபார்ப்புக்கு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை டைப் செய்துவிட்டு, ‘Restore’ என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் முக்கியமான வாட்ஸ்அப் உரையாடல்கள் கூகுள் டிரைவில் இருந்து மீட்டெடுக்கப்படும்.