இன்டர்நெட் இல்லாமலே UPI பேமெண்ட் செய்யலாம்! ஈசியான வழி இதோ!!
UPI சேவை உள்பட பல்வேறு வசதிகளை இன்டர்நெட் மூலம்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், UPI முறையில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே பேமெண்ட் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அவசரமாக பணம் செலுத்தவேண்டிய சூழ்நிலையில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் போனால் பிரச்சினைதான். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் UPI சேவை உள்பட பல்வேறு வசதிகளை இன்டர்நெட் மூலம்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், UPI முறையில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே பேமெண்ட் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆஃப்லைன் முறையில் உங்கள் மொபைல் ஃபோனிலிருந்தே UPI பேமெண்ட் செய்யலாம். இதற்கு *99# என்ற அதிகாரபூர்வ USSD குறியீட்டை டயல் செய்ய வேண்டும். இந்த சேவையை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது இணைய இணைப்பு இல்லாமலும் வங்கிச் சேவைகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இந்த USSD சேவை வங்கிகளுக்கு இடையே பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சரிபார்த்தல், UPI பின் நம்பரை உருவாக்குதல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் செயல்பாடுகளை எளிதாக பயன்படுத்த வழிவகுக்கிறது.
இன்டர்நெட் இணைப்பு இல்லாத சூழலில் UPI பேமெண்ட் செய்ய முதலில் உங்கள் போனில் *99# என்ற USSD குறியீட்டைப் டயல் செய்யுங்கள். திரையில் என்னென்ன வசதிகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கும் மெனு தோன்றும். அதில், பணம் அனுப்பு, பணம் கோருதல், பேலன்ஸ் சரிபார்த்தல், நிலுவையில் உள்ள பேமெண்ட், பரிவர்த்தனைகள், UPI PIN போன்ற பல ஆப்ஷன்கள் இருக்கும்.
மொபைல் எண் மூலம் பணம் அனுப்ப நினைத்தால், பெறுநரின் UPI கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்து 'Send' என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து, அனுப்ப விரும்பும் தொகையை டைப் செய்து மீண்டும் 'Send' என்பதை கிளிக் செய்யவும். விரும்பினால் பணம் அனுப்பவது தொடர்பான குறிப்பைச் சேர்க்கலாம். அடுத்து இந்தப் பரிவர்த்தனையை முடிக்க உங்கள் UPI PIN ஐ டைப் செய்யுங்கள். வெற்றிகரமாக பணம் அனுப்பப்பட்டது என்பதற்கான செய்தி திரையில் தோன்றும்.
UPI பரிவர்த்தனையை ஆஃப்லைனில் மேற்கொள்ள இந்த USSD சேவை மிகவும் பயனுள்ளது. ஆனால், இந்த சேவையை முடக்கி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. UPI சேவைகளை ஆஃப்லைனில் மேற்கொள்வதை பிளாக் செய்ய, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99# ஐ டயல் செய்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.