கூகுள் பேயில் ஆட்டோ-பே பரிவர்த்தனையைத் தடுப்பது எப்படி?
Autopay on Google Pay: ஜிபே செயலியில் 'ஆட்டோ பே' அம்சம் மூலம் பில்கள், ரீசார்ஜ்கள், EMIகள், OTT சந்தாக்கள் போன்றவற்றைத் தானாகச் செலுத்தலாம். முதல் முறை UPI PIN மூலம் அங்கீகரித்தால் போதும், பின்னர் தானாகவே பணம் செலுத்தப்படும். தேவைப்பட்டால், குறிப்பிட்ட சேவைக்கு ஆட்டோ பே வசதியை ரத்து செய்யலாம்.
Autopay on Google Pay
ஜிபே செயலியில் தானியங்கி பரிவர்த்தனை வசதியான 'ஆட்டோ பே' (Autopay) அம்சம் பயனர்கள் தொடர்ச்சியாகச் செலுத்தவேண்டிய கட்டணங்களை தானாகவே செலுத்த அனுமதிக்கிறது. பில்கள், மொபைல் ரீசார்ஜ்கள், கடன் EMIகள், OTT சந்தாக்கள் ஆகியவை இதில் அடங்கும். இவற்றிற்கு செலுத்த வேண்டிய பணம் திட்டமிடப்பட்ட தேதியில் தானாகவே செலுத்தப்படும். பில் பேமெண்ட்டை தவறவிடாமல் இருப்பதை இது உறுதிசெய்யும்.
Autopay on Google Pay
GPay செயலியில் ஆட்டோ பே அம்சத்தை அமைக்க, பயனர்கள் குறிப்பிட்ட சேவை வழங்குநரின் தளத்திற்குச் சென்று GPayக்கு திருப்பிவிட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்த, பயனர்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையையும் பராமரிக்க வேண்டும்.
Autopay on Google Pay
முதல் முறை மட்டும் UPI PIN நம்பரை பயன்படுத்தி தானாகப் பணம் செலுத்துவதை அங்கீகரிக்க வேண்டும். பிறகு, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பணம் தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
Autopay on Google Pay
சில சமயங்களில், GPay இல் ஒரு குறிப்பிட்ட சேவைக்கு மட்டும் ஆட்டோ பே அம்சத்தை ரத்து செய்ய விரும்பினால், அதற்கும் வாய்ப்பு உள்ளது. எப்போது வேண்டுமானாலும், ஆட்டோ பே வசதியை ரத்து செய்யலாம்.
Autopay on Google Pay
GPay செயலிக்குள் சென்று, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும். அதில் Autopay என்பதைக் கிளிக் செய்யவும். செயல்பாட்டில் உள்ள அனைத்து ஆட்டோ பே சந்தாக்களைக் காணலாம். பின் ரத்து செய்ய விரும்பும் சேவையைத் தேர்ந்தெடுத்து, Pause Autopay அல்லது Cancel Autopay ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
Autopay on Google Pay
UPI PIN நம்பரை டைப் செய்து ஆட்டோ பே ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும். இதன் மூலம் குறிப்பிட்ட சேவைக்கான ஆட்டோ பே அம்சம் ரத்து செய்யப்படும்.
Autopay on Google Pay
OTT தளங்கள், மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்கள் போன்ற சேவைகளின் ஆட்டோ பே அம்சத்தை ரத்து செய்தாலும், ஏற்கெனவே செலுத்தப்பட்ட சந்தா முடியும் வரை அந்தச் சேவைகளைப் பயன்படுத்த முடியும். ஆனால், சில சேவைகள் ஆட்டோ பே ரத்து செய்யப்பட்ட உடனேயே வேலை செய்வதை நிறுத்தலாம்.