- Home
- டெக்னாலஜி
- டெக் டிப்ஸ்
- உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி? வல்லுநர்கள் கொடுக்கும் ஐடியா
உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி? வல்லுநர்கள் கொடுக்கும் ஐடியா
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியாவின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்கள் ஐபோன்கள் அரசு ஆதரவுடன் உளவு பார்க்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள வல்லுநர்கள் கூறும் சில அறிகுறிகளைப் பார்க்கலாம்.

Battery Draining
அடிக்கடி மொபைலை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறதா? மொபைலின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்துபோகிறதா? அப்படியானால் இதுவும் ஹேக் செய்யப்பட்டிருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம்.
Mobile Heating
கேமிங் அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற நீண்ட நேர பயன்பாட்டின்போது மொபைல் போன்கள் சூடாவது இயல்புதான். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல் உங்கள் ஃபோன் சூடாகிறது என்றால், ஹேக்கர்கள் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
Linked accounts
மொபைல் உள்ள உங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் நீங்கள் பதிவுசெய்யாத பதிவுகள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்தால், பாதுகாப்பில் மொபைல் பாதுகாப்பில் மீறல் நடத்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
Delayed response
உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென மந்தமாக செயல்படுகிறாதா? டச் செய்யும் ரிஸ்பான்ஸ் மெதுவாக இருக்கிறதா? அப்படியானால் திருட்டுத்தனமான ஏதோ ஒன்று அதிக பேட்டரியையும் ஸ்டோரேஜையும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
Strange actions
உங்கள் ஃபோன் வித்தியாசமான முறையில், ஏறுக்கு மாறாக செயல்படத் தொடங்கினால் ஹேக்கிங் அறிகுறியாக இருக்கலாம். அப்ளிகேஷன்கள் அடிக்கடி தானாக க்ளோஸ் ஆகின்றன, மொபைல் தானாகவே ரீ-ஸ்டார்ட் செய்யப்படுகிறது என்பது போன்ற பிரச்சினைகள் ஹேக் செய்யப்படதால் ஏற்படுவதாக இருக்கக்கூடும்.
Pop-ups
போலியான வைரஸ் எச்சரிக்கைகள், பாப்-அப் மெசேஜ்கள், புஷ் நோட்டிபிகேஷன்கள் வந்துக்கொண்டே இருந்தால் உங்கள் மொபைல் போன் Adware மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நோட்டிபிகேஷன்களை தவிர்த்துவிடலாம்.
Unknown apps
உங்கள் ஸ்மார்ட்போல் வழக்கத்துக்கு மாறாக புதிய ஆப் ஏதும் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அது Spyware அப்ளிகேஷனாக இருக்கலாம். அதை உடனே நீக்கிவிடுங்கள். ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டும் ஆப்ஸை டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.
Mobile Data Usage
மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதா? மொபைல் டேட்டா வழக்கத்தை விட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் தீங்கிழைக்கும் அப்ளிகேஷன் ஏதும் ரகசியமாக பின்னணியில் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கலாம்.
Unknown photos in gallery
உங்கள் மொபைல் கேலரியில் அடையாளம் தெரியாத புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கிறதா என்று அவ்வப்போது செக் பண்ணுங்க. எந்தப் படமாவது நீங்கள் எடுத்ததாக நினைவில் இல்லை என்றால், உங்கள் மொபைல் கேமரா வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும். இதேபோல், ஃபோனில் ஃபிளாஷ் லைட் திடீரென ஆன் செய்யப்பட்டால், அதுவும் யாரோ உங்கள் மொபைலை ஹேக் செய்திருப்பதற்கு அடையாளமாக இருக்கலாம்.
Unknown numbers
உங்கள் மொபைலில் விசித்திரமான மெசேஜ்கள் அல்லது போன் கால் வந்திருக்கிறதா என்று பார்க்கலாம். நீங்கள் செய்யாத அழைப்புகள் இருந்தால் அல்லது உங்களுக்குத் தெரியாமல் ஏதாவது மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தால் உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.