- Home
- Tamil Nadu News
- அண்ணியை மடக்கிய கணவர்! விஷயம் தெரிந்த காதல் மனைவி அம்மு! வீடே களேபரம்! திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி!
அண்ணியை மடக்கிய கணவர்! விஷயம் தெரிந்த காதல் மனைவி அம்மு! வீடே களேபரம்! திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி!
அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவன், அவரை வீட்டிற்கே அழைத்து வந்ததால் மனமுடைந்த மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கணவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன் மனைவியுடன் தொடர்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் பாண்டியன். இவரது மனைவி அம்மு (28). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு 8வது மற்றும் 7வது படிக்கும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி இருக்கும் போதே அருள் பாண்டியன் அவரது அண்ணன் மனைவியிடம் கள்ளதொடர்பில் இருந்து உள்ளார்.
கணவன் மனைவி இடையே சண்டை
பின்னர் இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே கடந்த 4 நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவிக்கு தான் தெரிந்து விட்டதே என்று எண்ணி அருள் பாண்டியன் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவரது அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்த மனைவி வீட்டில் இருக்கும் போதே முத்துலட்சுமி என்ற பெண்ணை அருள் பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தற்கொலை
இதனால் காதல் திருமணம் செய்த அம்மு மனமுடைந்து தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். வாயில் நுரை தள்ளிய மயங்கிய நிலையில் இருந்த அம்முவை கண்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இறந்ததை கண்டு அருள் பாண்டியன் ஒன்றும் தெரியாதது போல அழுது கொண்டு இருந்ததால் உறவினர்கள் அருள் பாண்டியனை அடித்து விரட்டினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அம்மு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் கணவன் அருள் பாண்டியனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.