Vegetable Price : வெங்காயம், தக்காளி, இஞ்சி விலை என்ன.? கோயம்பேட்டில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?
மழையின் காரணமாக தக்காளி, வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையில் மாற்றம் இல்லைத நிலை உள்ளது.
Koyambedu
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேட்டில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
koyambedu market
முட்டைக்கோஸ் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கத்தரிக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை என்ன.?
இஞ்சின் தரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 240 வரை விற்பனையாகிறது. மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
பயிர் காப்பீடு தேதியை நீட்டித்த மத்திய அரசு.. மகிழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள்..