தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விற்பனை விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரட் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Vegetable
கத்தரிக்காய் விலை.?
வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது
Vegetables
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 2540க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது