மகளிர் சுய உதவி குழுவிற்கு ஐடி கார்டு.! இது மட்டும் இருந்தால் போதும்- சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு
மகளிர் முன்னேற்றத்திற்காக சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு கடன் உதவி, மானிய உதவி வழங்கப்படுகிறது. அடையாள அட்டைகள் மூலம் பேருந்து, கோஆப்டெக்ஸ், ஆவின், இ சேவை மையங்களில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்கிடலாம்.

Women self help groups : மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் யாருடைய உதவியையும் நம்பி இருக்காமல் சொந்தமாக தொழில் செய்து முன்னேற திட்டங்களுக்காக் கடன் உதவி, மானிய உதவி போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம்பல லட்சம் ரூபாய் வரை கடன் உதவியையும் வங்கிகள் வழங்கி வருகிறது. மகளிர் சுய உதவி குழு அமைக்க ஒரே கிராமத்தை சேர்ந்த 18 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் இணைந்து ஒரு குழுவை அமைக்கலாம்

மகளிர் சுய உதவி குழு- அமைப்பது எப்படி.?
அந்த குழுவில் 12 முதல் 20 வரை என்ற எண்ணிக்கையில் பெண்கள் ஒன்றிணைந்து தங்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் ஒரே குழுவாக சேர்ந்து செயல்படுவதே சுய உதவிக் குழு ஆகும். மகளிர் சுய உதவி குழு அமைக்க அந்தந்த ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளை அணுகி புதிய மகளிர் சுய உதவிக்குழு அமைத்துக்கொள்ளலாம்.
கடன் உதவி திட்டங்கள்
இந்த குழுவில் இணைபவர்களுக்கு கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 பேர் வரை இருக்கலாம். அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை15,00 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அடையாள அட்டை
இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் படி 1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார். இதன் மூலம் பேருந்து, கோஆப்டெக்ஸ், ஆவின், இ சேவை மையங்களில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்கிடவும் பேருந்தில் பயணிக்கவும் முடியும்.
மகளிர் சுய உதவி குழு அட்டை பயன்கள்:
1. பேருந்துகளில் 25 கிலோ பொருட்களை விலையின்றி எடுத்துச் செல்லுதல்
2. கடன்களுக்கு முன்னுரிமை [பயிர்க், கால்நடைக், சிறுவணிகக், தொழில் முனைவோர், மாற்றுத் திறனாளிகள் கடன்)
3. கோ-ஆப்டெக்ஸ் 5% தள்ளுபடி & ஆவின் கடைகளில் தள்ளுபடி
4. இ-சேவை மையங்களில் 10% சேவைக் கட்டணம் குறைவு