Rain Alert : சென்னைக்கு மழை எச்சரிக்கையா.? எந்த பகுதி ஹாட் ஸ்பாட் .? வெதர்மேன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லையென தெரிவித்துள்ள வெதர்மேன், டெல்டா மற்றும் தென் மாவட்ட பகுதி தான் மழைக்கான ஹாட் ஸ்பாட் என கூறியுள்ளார்.
இடி மின்னலோடு மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வருகிற 17 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (15.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மாவட்டங்களில் கன மழை
நாளை (16.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12 மாவட்டங்களில் கன மழை
17.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழைக்கான ஹாட் ஸ்பாட் எது.?
இதனிடையே சென்னையில் வருகிற 18 ஆம் தேதி மீண்டும் புயல் தாக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் மழை தொடர்பாக அச்சப்பட் தேவையில்லையென தெரிவித்துள்ளார். வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக டெல்டா மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் இருக்கும் என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை உள்ளிட்ட இந்த 20 மாவட்டங்களில் இன்று தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்.!