MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் கன மழை எச்சரிக்கை.! இத்தனை மாவட்டங்களிலா.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

மீண்டும் கன மழை எச்சரிக்கை.! இத்தனை மாவட்டங்களிலா.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீண்டும் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஜனவரி 11ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 05 2025, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
RAIN CHENNAI

RAIN CHENNAI

தமிழகத்தில் வானிலை நிலவரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மழையின் தாக்கம் குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கன மழைக்கான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-01-2025 மற்றும் 06-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில்  ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
RAIN

RAIN

வறண்ட வானிலை

07-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 08-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  09-01-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

35
Puducherry Rains

Puducherry Rains

மீண்டும் மழை எச்சரிக்கை

அதே நேரத்தில் வருகிற 11ஆம் தேதி  கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
chennai rain

chennai rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு: 

இன்று (05-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
நாளை (06-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.
 

55
Heavy Rain

Heavy Rain

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   
அரபிக்கடல் பகுதிகள்:  

06-01-2025: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு மழை
கனமழை
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved