- Home
- Tamil Nadu News
- கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! தலைகீழாக கவிழ்ந்த கார்! சுக்குநூறாக போன ஸ்கூட்டி! துடிதுடித்த கல்லூரி மாணவி!
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! தலைகீழாக கவிழ்ந்த கார்! சுக்குநூறாக போன ஸ்கூட்டி! துடிதுடித்த கல்லூரி மாணவி!
Road Accident: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவி, கார் மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மாணவியின் நண்பர் படுகாயமடைந்தார் மற்றும் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

கல்லூரி மாணவி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். கல்லூரி மாணவி ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
ஸ்கூட்டர் மீது கார் மோதல்
இந்நிலையில், செண்டூர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது ஸ்கூட்டர் மீது கார் பயங்கர மோதியது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மாணவியின் நண்பரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
கல்லூரி மாணவி உயிரிழப்பு
இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. காரி இருந்தவர்கள் காயங்களுடன் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

