MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக் கடலில் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள டிட்வா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை வானிலை மையம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 01 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, அண்ணாநகர், போரூர், ராமாபுரம், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்கோ செல்ல வேண்டாம் என டெல்டா வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.

25
Image Credit : our own

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: புயல் "டிட்வா" தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 70 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கில் நிலைத்திருக்கிறது. இது சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டு அடுத்த ஒரிரு நாட்களில் படிப்படியாக முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிலிருந்து வரும் ஒரு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலை டிட்வாவின் புயலுடன் மோதி, ஈரப்பதத்தை வடக்கிலிருந்து அளித்து, அமைப்பின் வடபகுதியில் புதிய மேகக்கூட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக் கடற்கரைக்கு மேலும் நெருக்கமாக வரும்போது, இந்த வடக்கு பக்க மேகத்துண்டுகள் மேற்கு திசையை நோக்கி இழுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை அடுத்த சில மணி நேரங்களில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

Related Articles

Related image1
காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!
Related image2
அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
35
Image Credit : our own

நம்பிக்கை அளிக்கும் வகையில், அமைப்பின் மையப்பகுதியில் புதிதாக உருவாகும் ஆழமான மேகக்கூட்டங்கள் தொடர்ந்து உருவாகி வருவதால், இன்று வடக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் மற்றும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

45
Image Credit : our own

அதேசமயம், காவிரி டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை வானிலை குறிப்பாகக் குறையும். இருப்பினும், மேற்கத்திய காற்றினால் மாலை/இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா & தென் மாவட்ட விவசாயிகள் வயல்வெளிகளில் தண்ணீரை வடியவைத்து வேளாண் பணிகளை தொடங்க முயற்சிக்கலாம், அடுத்த பரவலான மழை வாய்ப்பு டிசம் 4,5 தேதிகளில் எதிர்ப்பார்க்கலாம். தற்போதைய வானிலை அமைப்பு கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், கடல் சீற்றம் கடுமையாகவே இருக்கும், கரையோரப் பகுதிகளில் பலத்த சீற்றக் காற்று வீசும். மீனவர்களும் பொதுமக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்கோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

55
Image Credit : Google

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
காலையிலேயே வந்த குட்நியூஸ்! சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது!
Recommended image2
அண்ணி மீது அடங்காத ஆத்திரத்தில் கொழுந்தன்! வீடு புகுந்து! கதறியும் விடாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved