MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamil News: ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.! ஸ்டாலினை சந்திப்பதற்கு முன் திருமாவளவன் செய்த அதிரடி!!

Tamil News: ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.! ஸ்டாலினை சந்திப்பதற்கு முன் திருமாவளவன் செய்த அதிரடி!!

Tamil Nadu News: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனன், கட்சிக்கு எதிரான செயல்பாடுகளுக்காக ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிரான அவரது தொடர் கருத்துக்கள் மற்றும் கட்சிக்குள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 09 2024, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aadhav Arjuna

Aadhav Arjuna

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது திமுக, இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பு வழங்கப்பட்ட ஆதவ் அர்ஜூனன், திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் 2026ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிவித்தார். இந்த கருத்து திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aadhav Arjuna

Aadhav Arjuna

இந்தநிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
கட்சியின் துணை அண்மைக் பொதுச்செயலாளர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
 

34
Aadhav Arjuna removed from VCK

Aadhav Arjuna removed from VCK

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.  இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

44
Thiruma removed Aadhav Arjuna

Thiruma removed Aadhav Arjuna

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தொல். திருமாவளவன்
மு. க. ஸ்டாலின்
திமுக
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved