MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கூட்டணி கட்சியாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் குறித்து ஒரே வரியில் சொன்ன ராமதாஸ்!

கூட்டணி கட்சியாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் குறித்து ஒரே வரியில் சொன்ன ராமதாஸ்!

மத்திய பட்ஜெட்டில் வரிச்சுமை குறைப்பு, மருத்துவக் கல்வி விரிவாக்கம் ஆகியவற்றை பாமக வரவேற்ற கையோடு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 01 2025, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூட்டணி கட்சியாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் குறித்து ஒரே வரியில் சொன்ன ராமதாஸ்!

கூட்டணி கட்சியாக இருந்தாலும் மத்திய பட்ஜெட் குறித்து ஒரே வரியில் சொன்ன ராமதாஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மத்திய பட்ஜெட் குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. அதாவது பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை  ஈட்டுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  நிரந்தரக் கழிவு ரு.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால்   ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமை பெருமளவில் குறையும். அந்த வகையில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

24
மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும். 36  வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு  சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதும்,  அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும்  வரவேற்கத்தக்கவை ஆகும்.

34
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு

பள்ளிக் கல்விக்கு  ரூ. 78572.10  கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்தும்,  நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்க் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி தான் இந்த முறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது என்பதால் இந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

44
வேளாண் விளைபொருட்கள்

வேளாண் விளைபொருட்கள்

வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை சட்டப்பூர்வ உரிமையாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதமர் மோடி
இராமதாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
Recommended image2
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image3
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved